இலஞ்சம் பெறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை என - காவல்துறை எச்சரிக்கை
கையூட்டுப் பெற்றுக் கொண்டு சட்டவிரோதச் செயல்களை அனுமதிக்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக காவல்துறை
தலைமையகத்திலிருந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள. இந்தச் சுற்றறிக்கையில்
காவலர்கள் எவ்வளவு தொகையை கையூட்டாக பெறுகிறார்கள் என்ற விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சொத்து தொடர்பான சிவில் விவகாரங்கள் போன்றவற்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெறப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுவிற்பனைக்கு 60 ஆயிரம் ரூபாயும், திருட்டு மணல் கடத்தலுக்கு 30 ஆயிரம் ரூபாயும், சூதாட்டம், விபத்து தொடர்பான வழக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் வரையும் கையூட்டு பெறப்படுவதாகவும் மேலும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சேலம், கோயமுத்தூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்கள், அதிகாரிகள் அனைவருக்கும் சுற்றறிக்கைகளை அனுப்பி உள்ளனர்.
அதில் காவல் நிலையங்களில் எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை, 100 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெறுவது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கையூட்டு பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயல்களுக்குத் துணை போவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள்