முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தனது 3 மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 37 ஆவது நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் ராகுல் காந்தி இந்திராகாந்தி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்..
கருத்துகள்