ஆலயத்தில் அன்னதானம் வழங்க மறுத்து அவமரியாதை செய்யப்பட்ட பெண்ணுக்கு சமபந்தி மரியாதை செய்த அமைச்சர் சேகர் பாபு
சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் அருகில் அமர்ந்து இருக்கும் பெண் தன்னை ஆலயத்தில் பந்தியில் அவமதித்தது குறித்து வைரலான நிலையில் அதையறிந்த. தமிழ்நாடு அரசின் அறநிலைய அதிகாரி கவனத்துக்குச் சென்ற இந்த காணொளிக் காட்சியைக் கவனத்தில் கொண்டு
முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே சேகர்பாபுவும் அந்த பெண்மணியை அழைத்து வருத்தம் தெரிவித்ததோடு இனி இதுமாதிரி செயல் நிகழாதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த
பின்னர் பாதிக்க பட்ட பெண்ணை அருகே அமரவைத்து அமைச்சரும் ஆலயத்தில் சமபந்தி அமர்ந்து சாப்பிட்டது சமூக நீதியை நிலை நிறுத்திய செயலாகும் அதை அமைச்சர் தமது முகநூல் பக்கத்தில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம்.
உடன் அறநிலையத்துறை ஆணையாளர் திரு.குமரகுருபரன், திரு.பாலாஜி எம்.எல்.ஏ. " எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்