குடியரசுத் தலைவர் செயலகம் துர்கா பூஜையை
முன்னிட்டு குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: துர்கா பூஜை தின நன்னாளில் நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் சக குடிமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துர்கா தேவி சக்தியின் அடையாளம் மற்றும் மகளிர் சக்தியின் தெய்வீக வடிவமாகும். துர்கா பூஜை என்பது தீமையை அழித்து வெற்றியைக் கொண்டாடுவது ஆகும். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வாழ்க்கை மற்றும் இயற்கையின் சங்கமம் ஆகும்.
துர்கா பூஜை பண்டிகையின் போது பெண்களுக்கு உயரிய மரியாதை மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் சமபங்களிப்பு உடைய சமுதாயத்தை உருவாக்க தீர்மானிப்போம்.
துர்கா பூஜை பண்டிகையின் போது மக்களிடையே அமைதி, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஏற்பட நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நமது தேசத்தின் சேவை மற்றும் முன்னேற்றத்திற்காக நம்மை அர்ப்பணிப்போம் என்று குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.பிரதமர் அலுவலகம்
நவராத்திரி காலத்தில் அன்னை கால்ராத்ரியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்
நவராத்திரி காலத்தில் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் கோரி அன்னை கால்ராத்ரியிடம் பிரதர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது ;
"मां कालरात्रि से प्रार्थना है कि सारी बाधाओं को दूर कर वे हर किसी के जीवन में सुख, शांति, समृद्धि और उत्तम स्वास्थ्य लेकर आएं।" என தெரிவித்துள்ளார். சிவகங்கை சமஸ்தான மன்னர் மூத்த வழி வாரிசான மேதகு துரைசிங்க ராஜாவின் பேரன் சண்முக ராஜா.வழங்கிய செய்தி..மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று நவராத்திரி ஐந்தாம் நாள் திருவிழா
.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று நவராத்திரி ஐந்தாம் நாள் திருவிழா வைபவத்தில் இன்று அன்னை மீனாட்சி சங்கீத சியமாளை திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஜெகன் மாதா ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில் தான், அறிவு என்னும் அம்பை கட்டுப்படுத்துகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் அடக்கி , அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும். தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள். இதனால் சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி,மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள்.
தேவியின் ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது. மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள் இன்று அன்னை மீனாட்சியை தரிசித்தால் வாக்கு , இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.
கருத்துகள்