லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் பா ஜ க வினர் புகுத்த நிலையில் கலவரம் துப்பாக்கிச் சூடு எட்டு பேர் பலி காங்கிரஸ் போராட்டம்
வேளாண்மைச் சட்டங்களுக்கெதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் கலவரமாக மாறியதால் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவசாயிகளின் போராட்டத்தில் பாஜகவினர் நுழைந்தது தான் இந்தக் கலவரத்திற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு நடத்தி வருகிற போராட்டம் பத்து மாதங்களாக நீடிக்கும் நிலையில்,
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு புறக்கணிதத நிலையில் உத்திரபிரதேசத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து அம்மாநில விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லக்கிம்பூர் கெர்ரி எனுமிடத்தில் உத்தரபிரதேச மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜகவினர் வருகை தந்திருந்தனர். அப்போது விவசாயிகள் பாஜக தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார், விவசாயிகள் மீது மோதியதால் ஏற்பட்ட வன்முறையில் எட்டு பேர் பலியாகினர்; வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. லக்கிம்பூர் மாவட்டம் பன்வீர்பூரில் நேற்று நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்பதாக இருந்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், கூட்டம் நடக்கும் இடத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஏராளமான விவசாயிகள் அந்த பகுதிக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் மோனு ஓட்டி வந்த கார், விவசாயிகள் மீது மோதியது.சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் பலியானதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மத்திய அமைச்சரின் மகனின் கார் உட்பட இரண்டு கார்களை தீ வைத்து எரித்தனர்.அத்துடன் அந்த வழியாக வந்த பல்வேறு வாகனங்களுக்கும் தீ வைத்த விவசாயிகள், கல் வீச்சிலும் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்த ஏராளமான விவசாயிகள் அங்கு குவிந்தனர்.முதலமைச்சருடன் வந்த 2 கார்கள் விவசாயிகள் இருந்த கூட்டத்திற்குள் கண்மூடித்தனமாக புகுந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்துப்போட்டுத் தாக்கினர், விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரிலிருந்த பாஜக தொண்டர்கள், ஓட்டுநரை அடித்துக் கொன்றனர். பின்னர் நடந்த போராட்டம் வன்முறையிக மாறியது, அதைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில் எட்டு பேர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது, அதைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் பாஜகவினர் 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.
லக்கிம்பூர் வன்முறையின் போது தனது மகன் அங்கு இல்லை எனவும், அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதெனவும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு காங்கிரஸ் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது, தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தினர் அதில் கலந்து கொண்டு பேசிய கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதிவழியில்போராடும் விவசாயிகள் மீது மோடி அரசின் உள்துறை இணைஅமைச்சரின் மகன் கார் ஏற்றி மூன்று விவசாயிகளை படுகொலை செய்கிறான். கொலையாளி கைதுசெய்யவில்லை.ஆனால் விவசாயிகளுக்காகப் போராடும் பிரியங்கா காந்தி அவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
பிரியங்காகாந்தியின் கைது கடுமையான கண்டனத்துக்குரியது. விவசாயிகளைப் படுகொலைசெய்த பாஜக அமைச்சரின் மகனை உடனடியாக கைது செய்யவேண்டும். அமைச்சர் பதவிவிலக வேண்டும்.பிரியங்கா விடுதலை செய்யப்படவேண்டும்.மோடி அரசு எவ்வளவு அடக்குமுறையை ஏவினாலும் விவசாயிகளுக்காக காங்கிரஸ் களத்தில் நிற்கும். எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்