சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்‘மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரத்தை’ சுகாதார அமைச்சகம் தொடங்கியது
உடல் நலனுக்கு மனநலம் மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று கூறினார். மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று முதல் அனுசரிக்கிறது. உலக மனநல தினத்தில் இது நிறைவு பெறுகிறது.
மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை சர்வதேச அளவில் ஏற்படுத்துவதற்கும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் திரட்டுவதற்கும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
கொவிட்-19 காரணமாக தினசரி வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்துள்ள சமயத்தில் இந்த ஆண்டின் உலக மனநல தினம் வருகிறது. மக்களிடையே பல்வேறு மனநல கவலைகளை கொவிட் ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், மனநல கோளாறுகளை சுற்றியுள்ள பிம்பங்களை உடைக்க மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரம் அனுசரிக்கப்படுகிறது.
மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரத்திற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, யுனிசெப்பின் உலக குழந்தைகள் அறிக்கையை மத்திய சுகாதாரம், குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார்.
21-ம் நூற்றாண்டில் குழந்தைகள், இளம்பருவத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களின் மன ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு விரிவான பார்வையை இந்த அறிக்கை வழங்குகிறது. அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளபடி, கொவிட்-19 தொற்றுநோய் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்