மூத்த பத்திரிகையாளர் வி. அன்பழகன் காலமானார்.
30 ஆண்டு காலமாக அச்சு ஊடகப்பணி. மக்கள் செய்தி மையம் தொடங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள் மூலம் அரசின் உயர் அதிகாரிகளின் பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தவர். இதற்காகவே 18 வழக்குகளும் குண்டர் சட்டமும் பாய்ந்தன உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் எழுத்து போராட்டம்.
நிரந்தர உறக்கம், நிம்மதியை தரட்டும்..திரு. வி.அன்பழகன் - முந்தைய அஇஅதிமுக அரசின் பல அமைப்புகளின் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். துணிவில், என்னைப் போலிருந்தத சகோதரர் மறைந்தார் என்ற செய்தி இதயத்தை மிகுந்த கனத்ததாக்கி விட்டது. சென்னை பிரஸ் கிளப்பில். அவரது முட்டை ஊழல் 300 கோடி வெளியிட்ட போது அண்ணன் திருச்சிராப்பள்ளி வேலுச்சாமி அவர்கள் உள்ளிட்ட நபர்கள் கலந்து கொண்ட அழைப்பின் பேரில் உடன் கோட்டையூர் தம்பி பி.சேகருடன் சென்று கலந்து கொண்டு வந்த பிறகு பூந்தமல்லியி ஒருமுறையும், நமது அமைதிப்படை ஆசிரியர் அண்ணன் ஜெ.ஜெயவீரன் அலுவலகத்தில் போரூரில் (ஜி கே சினிமா) முன் சந்தித்த பிறகு கொரானா பரவல் அரசு நடவடிக்கை காரணமாக இரண்டு வருடங்கள் பல நட்பு வட்டம் சந்திக்க இயலாத நிலையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு செய்தி இறக்கும் முன் அவர் மீது போடப்பட்ட 18 வழக்குகளும் பொய் வழக்குகள் என நீதிமன்றம் மூலம் நிரூபித்தார்.. குற்றம் சுமத்தப்பட்டவர் என்ற பெயரோடு சாகவில்லை. களப் போராளி
இவரைப் போல் இன்னொரு மனிதரைக் காண்பது அரிது. பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்தஇரங்கல். மக்கள் செய்தி மையம் நிறுவனரும் பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் உடல் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து நேரடியாக கொரோனா தொற்று காரணமாக விருகம்பாக்கம் இடுகாடு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 14.10.2021 நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருத்துகள்