சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று (31, அக்டோபர் 2021) குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்குக் குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர். சர்தார் வல்லபாய் படேலின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த புதுதில்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சதுக்கத்திற்கும்
குடியரசுத் தலைவர் சென்றிருந்தார். ஒற்றுமை வாரத்தை கொண்டாடுகிறது தேசிய ரயில் அருங்காட்சியகம்: இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை சர்தார் வல்லபாய் படேல் கண்காட்சி
சர்தார் படேல் பற்றிய கண்காட்சியை அமைத்து ஒற்றுமை வாரத்தை, இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை இந்திய ரயில்வேயின் தேசிய ரயில் அருங்காட்சியகம் கொண்டாடுகிறது. இந்த கண்காட்சி தில்லியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்க, முக்கிய முயற்சிகள் மேற்கொண்டதற்காக சர்தார் வல்லபாய் படேல் நினைவு கூறப்படுகிறார். இந்தியாவின் இரும்பு மனிதரின் உத்வேகம் தரும் வாழ்க்கைப் பயணம், நாட்டை இணைக்கும் இந்திய ரயில்வேயின் இரும்புப் பாதைகளை நினைவு படுத்துகிறது. ஆகையால், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, இந்த கண்காட்சி மூலம் தேசிய ரயில் அருங்காட்சியகம் புகழாரம் சூட்டுகிறது. இந்த கண்காட்சி, 2021 நவம்பர் 14ம் தேதி வரை, திறந்திருக்கும்.
இந்த நிகழ்ச்சிக்காக, சர்தார் படேலின் பங்களிப்பை கொண்டாட பொது மக்களுக்கு தேசிய ரயில் அருங்காட்சிகம் அழைப்பு விடுக்கிறது மற்றும் இந்திய ரயில்வே நாட்டை ஒன்றாக இணைக்கிறது.
கருத்துகள்