இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 75 லட்சம் கிலோ கழிவுகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அப்புறப்படுத்தப்படும்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்
இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்' ஒரு பகுதியாக, நேரு யுவ கேந்திர சங்கம், பஞ்சாப் & சண்டிகர் தூய்மை இயக்கத்தை இன்று சண்டிகரில் ஏற்பாடு செய்தது.
எஸ்.டி. கல்லூரி, செக்டர் -32-க்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திர சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்களுடன் மத்திய இளைஞர் நலன் & விளையாட்டு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மக்களைத் திரட்டுவதும், கழிவுகளை சுத்தம் செய்வதில் அவர்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதும், முக்கியமாக நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் கழிவுகளை நீக்குவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் என்று கூறினார். "இந்த மாபெரும் முயற்சியின் மூலம், 75 லட்சம் கிலோ கழிவுகள், முக்கியமாக பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மக்களின் ஆதரவு மற்றும் பங்கேற்புடன் அகற்றப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை, விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை குறிக்கும் விதமாக 2021 அக்டோபர் 1 முதல் 31 வரை நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை ஏற்பாடு செய்கிறது. ஆறு லட்சம் கிராமங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரு யுவ கேந்திர சங்கத்தில் இணைந்த இளைஞர் அமைப்புகள் மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கருத்துகள்