ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி சமூகவலைதளங்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் ஆளுநர் மாளிகை எச்சரிக்கை
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் ஆளுநர் மாளிகை அறிக்கை
ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி சமூகவலைதளக் கணக்குகளை நம்பி பொது மக்கள் ஏமாந்து விட வேண்டாமென ஆளுநர் மாளிகை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
‘ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் சில போலி மின்னஞ்சல்கள் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு.
விசாரணையும் நடந்துவருகிறது.
இப்படியான போலியான கணக்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
govtam@nic.in
என்ற மின்னஞ்சல் முகவரியும்,
@rajbhavan_tn
என்ற ட்விட்டர் கணக்கும்தான் அதிகாரப்பூர்வமானவை” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்