காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி கிராம ஊராட்சிக் கூட்டங்கள் இந்தியா முழுவதும் நடத்தும் நிலையில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் கிராமசபைக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டு கிராமத்தின் தீர்மானங்களை விவாதிப்பது முதல் முறையாகும் இது வரவேற்க வேண்டிய நிகழ்வாகும்.
மாநிலத்தின் முதல்வர் கிராமத்திற்கு நேரடியாக வந்து, தங்கள் குறைகளை கேட்டுச் சென்றிருப்பதால் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பது மக்களின் நம்பிக்கை ஏற்படும். அதிகாரிகளும் முதல்வரே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றதால் அவர்களுக்கு வேண்டிய அடிப்படை விஷயங்களை கட்டாயம் செய்வார்கள்.
முதல்வரின் பாப்பாபட்டி கிராம வருகையில் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். மேல்நிலை தண்ணீர் தொட்டி, பள்ளியைத் தரம் உயர்த்துவது நியாய விலை கடை அமைப்பது, நூலகம் அமைப்பது, பூங்கா அமைப்பது, பாலம் அமைப்பது, சாலை அமைப்பத போன்ற எந்த அடிப்படை வேலைகளும் இனிமேல் நிறைவேற்றப்படும். முதலமைச்சர் கிராமசபை கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றி கிராம தீர்மானங்களை விவாதிப்பதற்கு
பாப்பாபட்டி ஊராட்சியை முதல்வர் தேர்ந்தெடுக்க மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது. அது ஒரு ஊரல்ல. அது ஒரு வரலாறு.
அந்த உண்மை வரலாறு என்ன ?
அதை என்ன என்பதை இப்போது பார்ப்போம். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மூன்று கிராமங்கள். கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாகாச்சியேந்தல். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 4 கிராமங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை நடத்தினால் வெற்றி பெற்றவர் மீண்டும் இராஜினாமா ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஹரிஜன ஆதிதிராவிட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காரணம். தலைவர் பதவிக்கு உள்ளூர் ஆதிதிராவிட மக்கள் போட்டியிட விரும்புவதில்லை. மீறி யாராவது போட்டியிட்டால், எதிராக ஊர் ஆதரவு பெற்ற வேறொரு ஆதிதிராவிடர் நிறுத்தப் படுவார். அவர் வெற்றி பெற்ற உடனே ராஜினாமா செய்து விடுவார். இது தான் இந்த நான்கு ஊர்களிலும் நிலைமை சுமார் 15 ஆண்டுகள்.
இந்தியாவின் தேர்தல் ஆணையத்துக்கு சவாலாக இருந்த கிராமங்கள் இவை. அதில் அரசியல் புகுந்த நிலையில் தான் பிரச்சினை பெரிதாகியது தான் உண்மை.
2006 ஆம் ஆண்டு கலைஞர் டாக்டர் மு.கருநாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சரானார். மதுரை மாவட்ட ஆட்சியராக உதய சந்திரன் நியமிக்கப் பட்டார். அவருக்கான முதல் உத்தரவே ஊராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான். தேர்தலை நடத்த வேண்டும் எனப் போராடும் இடதுசாரி, ஆதிதிராவிடர் அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்களுடன் இணைந்தார். பின்னர்
தேர்தல் நடைபெற்றது. நான்கு ஊராட்சித் தலைவர்களாக ஆதிதிராவிடர்கள் பதவியேற்றனர். பின்னர். ஊராட்சித் தலைவருக்கு எந்திரத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பாக நியமிக்கப் பட்டதையும். நான்கு பேருக்கும் சென்னையில் அரசு சார்பில், அன்றைய முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவும் நடத்தி.
மதுரை இரயில் நிலையத்திலிருந்து 4 கிராம மக்களும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மறைந்த பி. மோகன் தலைமையில் சென்னை புறப்பட்ட அந்த மக்களை, அதிகாலை 4 மணிக்கு இரயில் நிலைய பிளாட்பாரத்தில் வரவேற்றவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது முதலமைச்சரான பின் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்று குறைகளைக், கோரிக்கைகளைக் கேட்டுள்ளார். தி.மு.க அரசின் செயல்பாட்டில் குறையிருந்தால் சொல்லுங்கள்.. அப்பத்தான் சரி செய்ய முடியும் என்று அவர்களிம் பேசியிருக்கிறார். இது தான் ஒரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்க வேண்டிய மாற்றமும் கூட என்று தெரிவிக்கிறார்கள். கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி சீர்மறபினருக்கான இட ஒதுக்கீடு கேட்கும் கோரிக்கை வந்த நிலையில் முதல்வர் சுய உதவி குழுக்கள் குறித்து வினவிய நிலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிவில் மதுரை - பாப்பாபட்டி கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற்ப, கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அறிவித்தேன்.
கே.நாட்டாப்பட்டியில் உழவர்களுக்கு உதவும் வகையில் பயிர்க்கடனுக்கான காசோலைகளை வழங்கினேன்.
கழக அரசு தமிழ் மக்களின் நலனைப் பேணும் அரசு! எனத் தெரிவித்துள்ளார்.அக்டோபர் 2 ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தேவர் தந்த தேவர் என்றழைக்கப்படும் கல்வித் தந்தை பி.கே.மூக்கையாத்தேவர் பிறந்த ஊரான பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்ற நிகழ்வு சிறந்த நடவடிக்கையாகும் பார்க்கலாம். அதோடு அப்பகுதி மக்களின் கலாச்சார பயன்பாடுகள் குறித்த வரலாறும் அறிவது. முக்கியமாகும்.உசிலம்பட்டி பகுதியில் கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை குல தெய்வம் கோயிலாக வழிபடும் மண்ணுலகாத்தேவர் மக்கள் கரிசல்பட்டி வகை
1.மதயானைத்தேவர்,2.சின்னுடையாத்தேவர் 3.கொல்லித்தேவர்,4.ஆண்டரசத்தேவர்5.கட்ராண்டித்தேவர்,6.புளுத்தான்தேவர்
எனும் ஆறு பங்காளிகளின் மகள்களை திருமணம் செய்தவர்கள் அதாவது ஆறு தேவர்களின் மருமகன்கள் .
1.முதலைக்குளம் ஒச்சாண்டம்மன் என்று அருள் விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை குல தெய்வக் கோவிலாக வழிபடும் சேறாபுலியாத்தேவர் மக்கள் பல்லாக்கு ஒச்சாத்தேவர்,தண்டில் ஒச்சாத்தேவர் வகையராக்கள்.
2.கொடிக்குளம் நல்ல தங்காள் கோவிலை குல தெய்வமாக வழிபடும் பிறவியம்பட்டி பிறவிஒச்சாத்தேவர் வகையராக்கள்.
3.உச்சப்பட்டி தென்கரை கருப்புகோவிலை குல தெய்வமாக வழிபடும் வசக்கழுவத்தேவர் மக்கள் குறுக்கு ஒச்சாத்தேவர் வகையராக்கள்
4.பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் விளங்கும் ஆச்சிகிழவி ஆண்டாயி கோவிலை குல தெய்வமாக வழிபடும் பகாத்தேவர்,கீரித்தேவர் மக்கள் எட்டுடன் இரண்டு சேர்ந்த பத்துத்தேவர் வகையராக்கள்
5.மதிப்பனூர் மூனுசாமி என்று அருள் விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை குல தெய்வமாக வழிபடும் சீறும்புலியான் மக்கள் ஏழு தேவர் வகையராக்கள்
6.புத்தூர் நாட்டின் கு.போத்தம்பட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை குல தெய்வமாக வழிபடும பெரிய பின்னத்தேவர் மக்கள் இரண்டு தேவர் வகையராக்கள்
தன்னாட்சிக் கள்ளர் நாடுகளில் பிரமலைக்கள்ளர்கள் அறுதிப் பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதியில் உசிலம்பட்டி பகுதி முழுவதையும் பரவி வாழும் மக்கள்.
கருத்துகள்