இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இணைய நிர்வாகம் குறித்த இந்திய இணையதள நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) 3 நாள் ஆன்லைன் நிகழ்ச்சியை மின்னனுவியல் & தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இந்திய தேசிய இன்டர்நெட் எக்சேஞ்(நிக்ஸி) இணைந்து நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதன் இறுதிநாள் நிகழ்ச்சியில், மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இணையதளத்தை வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்க வேண்டும். அதிகளவிலான மக்கள் இணையதளத்துடன் இணைந்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது. இங்கு 800 மில்லியன் பேர் இணையதள இணைப்பில் உள்ளனர். உலகின் மிகப் பெரிய ஊரக பிராட்பேண்ட் திட்டம் இங்கே உள்ளது. விரைவில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இணையதளத்துடன் இணையவுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவும், பொருளாதார வாய்ப்புகள், டிஜிட்டல் தொழில் முனைவுகளை விரிவுபடுத்தவும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வந்தார்.
கருத்துகள்