திரைப்பட நடன இயக்குனர் கே. சிவசங்கர் காலமானார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பணியாற்றிய 800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர்
பூவே உனக்காக (1996), துவங்கி பாகுபலி போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியர். எஸ். எஸ். ராஜமௌலியின் வரலாற்று நாடகத் திரைப்படமான மகதீரா (2008) படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த நடனத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். "தீரா தீரா தீரா" பாடலில் "புதுமைகளை காட்டியதக்கு பரிசு வழங்கப்பட்டது.2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் அதி விரைவான நடனம் குறித்து பரவலாக பேசப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள நியூ இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் நடனத்திற்கான சேவைகளுக்காக இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
சிவசங்கர் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு (2006) படத்தில் அஜித் குமாரின் நடன ஆசிரியராக நடித்தார். நடனக் காட்சிகளை வடிவமைக்க நடன இயக்குனரிடம் கேட்கப்பட்டது, மேலும் படத்தில் அதிரடி காட்சிகளையும் அஜித்தின் பெண்மை துலங்கும் உடல் மொழியையும் வடிவமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். பின்னர் இவர் பாலாவின் வரலாற்று நாடகப் படமான பரதேசி (2013) படத்தில் இவர் அப்பாவி தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மதம் மாற்றும் பணியில் ஈடுபடும் ஒரு கிறிஸ்தவ சமய பரப்புநர் பாத்திரத்தில் நடித்தார்.
கே.சிவசங்கர் 1948 ஆம் ஆண்டு சென்னை பாரிஸில் (மண்ணடியில்) கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் பழமன்டி கல்யாண சுந்தரம் கோமளம் அம்மாளின் மகனாவார் இவரது தந்தை கர்நாடக இசை விழாவில் கலந்துகொண்டபோது, அவரை பிரதிநிதியாக நாடகம் மற்றும் நடன விழாக்களுக்கு செல்லுமாறு சிவசங்கரிடம் கேட்கப்பட்டது. இது இவர் நடனத்தைக் கற்றுக்கொள்ள ஊக்கமள்ளிப்பதாக அமைந்தது. மைலாப்பூர் நட்ராஜ் மற்றும் சகுந்தலாவிடம் நடனத்தில் அடிப்படைகளை கற்றுக்கொண்டவர் 1974 ஆம் ஆண்டு நடன அமைப்பாளர் சலீம் உதவியாளராகச் சேர்ந்தார். இது இவர் புகழ் பெற உதவியது.கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது, அவருடைய சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவசங்கர் மாஸ்டருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைய மகன் அஜய் உடனிருந்து மூவரையும் கவனித்து வந்த நிலையில் தற்போது காலமானார்.
கருத்துகள்