க.சண்முகம், சிவகங்கை மாவட்டச் செய்தியாளர்:. பொருளாதாரத்தில் பின்தங்கிய, நேமம் (குன்றக்குடி) கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பலர் பாராட்டு.!.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், (குன்றக்குடி) நேமம் ஊராட்சி நேமத்தான்பட்டி (பழையூர்) கிராமத்தில் வசிப்பவர் பிச்சை தாயார் பிரான்சிஸ் மல்லிகா.இவர்களது மகள் கனிமொழி. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் நிர்வாகத்திலுள்ள (அரசு உதவி பெறும்) தருமை கயிலை குருமணி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி நீட் தேர்வில் 547 மதிப்பெண்கள் பெற்றார் அதாவது வகுப்பு வாரி நிர்ணயமாகியதை விட 132 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சியடைந்தார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய உழைப்பு ஊதியம் பெறும் ஏழைக் குடும்பத்தில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவர். கிடைத்த ஆதரவின் மூலமாக மாணவி நீட் பயிற்சி மையங்கள் உதவியின்றி சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார் .
கிராமப்புற மாணவி குன்றக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் பயின்ற கனிமொழி, "நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் மற்ற மாணவர்களுக்கு
"நீட்" தேர்வைப் பற்றிய அச்சத்தை மாணவி கனிமொழி நீக்க காரணமாகவுள்ளார் .
இந்த நிலையில் தருமை கயிலை குருமணி மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் சார்பில் குன்றக்குடி திருவண்ணாமலை ஐந்து கோவில் தேவஸ்தானம் ஆதீனகர்த்தார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆதினத் திருமடத்திற்கு மாணவியை அழைத்து சால்வை அணிவித்தும்; திருநீருபூசியும் அருளாசி வழங்கி; பழங்கள் கொடுத்து மனதார வாழ்த்தினார்.
மேலும் விபரம் தெரிந்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்து சால்வையணிவித்து வாழ்த்தியதுடன்.உயர் கல்வி கற்க வேண்டிய உதவிகளை செய்வதாக தெரிவித்ததுடன் வாழ்த்துக்கள் கூறினார்
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி அவர்களை மாணவி கனிமொழி, தாயார் அம்மா பிரான்சிஸ் மல்லிகா, மக்கள் தொடர்பு மாவட்ட அதிகாரி பாண்டி, அழைப்பின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று சந்தித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரும், மாணவி கனிமொழியை மிகச்சிறந்த திறமை படைத்த மாணவியாக கனிமொழி திகழ்கிறார். இவர் மேலும் பல சாதனைகளை நிச்சயம் புரிவார், அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டிய உதவிகள் செய்யப்படுமென சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மது சூதன் ரெட்டி, மாணவியை உற்சாகப்படுத்தினார். அப்போது மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, பத்திரிகையாளர் நேமத்தான்பட்டி ஸ்ரீனிவாசன், பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் புலித்தேவன் பாண்டியன், உடனிருந்தனர். மேலும் நேமம் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா அந்திரி மாணவி கனிமொழிக்கு சால்வை அணிவித்து பகுதி கிராம மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆசிரியர்கள்
பெற்றோரும் சுற்றமும் நண்பர்களும் கிராம மக்களும் மாணவி கனிமொழியை வாழ்த்தினர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் தலைமையிலான குழுவில் கருத்து பதிவிட்டு பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் அந்த நிலையில் இத் தேர்வு தேவையில்லை என்ற மாநில அரசு நிலைப்பாட்டை நாமும் கூறுகிற நிலையில் தற்போது அது நீக்கப்படும் முன்பாக உள்ள நிலையில் மாணவி கனிமொழி தேர்ச்சி ஒரு அத்தி பூத்த கதை தான்.
உயர்குடி மக்கள் ஆங்கில அறிவு படைத்தவர்கள் "சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் படித்தவர்களால் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடே காரணம், பல பாடத்திட்டம் ஒரே வினாத்தாள் என்ற முறை தான் ஆபத்தான நிலை
தமிழ் வழிக்கல்வியில் குன்றக்குடி என்னும் சிறு கிராமத்தில் பயின்ற பயிற்சி பெறாத மாணவி வெற்றி இது ஒட்டுமொத்த கிராமப்புற மாணவ மாணவிகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதில் வியப்பில்லை. இருந்தும் நீட் தேர்வு தேவையில்லை என்பதே நமது அடித்தள மாணவர்களின் நிலை அப்போது தான் அதிகம் மாணவர்களின் மருத்துவக்கல்விக்கனவு நிறைவேறும்.
கருத்துகள்