விமானப் பயணியிடம் இருந்து 1 கிலோ கொகைன் போதைப்பொருள் மற்றும் ரூ.5.76 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல்.
விமானப் பயணியிடம் இருந்து 1 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல்.
கொகைன் அடங்கிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட துகள்களை விழுங்கி கடத்தலில் ஈடுபட்ட பெண் பயணியை புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு கிலோ போதைப்பொருள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முனையம் 3-க்கு சில தினங்களுக்கு முன் வந்த உகாண்டா பயணியின் நடை மற்றும் உடல் அசைவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால், அவருக்கு உதவி ஏதேனும் வேண்டுமா என்று சுங்க அதிகாரி ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் முதலில் அணுகினார்.
உதவியை அவர் மறுத்ததோடு, விசித்திரமான உடல் அசைவுகளை தொடர்ந்து வெளிப்படுத்தியதால், அதிகாரிகள் அவரை இடைமறித்து விசாரித்தனர். போதைப்பொருள் அடங்கிய 91 துகள்களை விழுங்கியதை விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டதால், ஆர் எம் எல் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பாட்டார். மருத்துவமனையில் அவரது உடலில் இருந்து 992 கிராம் போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது. 2021 டிசம்பர் 29 அன்று அவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.மற்றும் வேறு ஒரு தகவல் குறிப்பு படி ரூ.5.76 கோடி மதிப்பிலான வைரங்கள் (1052.72 கேரட்) பறிமுதல்
ரகசியத் தகவலின் அடிப்படையில் சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் துபாய் செல்லவிருந்த பயணியை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவரது உடைமைகளை பரிசோதித்ததில் அவரது சூட்கேசில் 22 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது பற்றிய தகவலை அந்தப் பயணி தெரிவிக்காததை அடுத்து, நாட்டில் இருந்து அவற்றை சட்டவிரோதமாக கடத்துவது தெரிய வந்தது. 1052.72 கேரட் எடை கொண்ட இந்த வைரங்களின் மதிப்பு ரூ.5.76 கோடியாகும். 1962 ஆம் ஆண்டில் சுங்கச் சட்டத்தின் கீழ் வைரங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியை கைது செய்தனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்