பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படை மேற்கொண்ட கூட்டு கடல்சார் பயிற்சி நிறைவு
‘பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட கூட்டுக் கடல்சார் பயிற்சி 2022 ஜனவரி 25ம் தேதி நிறைவடைந்தது.
இந்தியக் கடற்படை, விமானப்படை, ராணுவம் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படைகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காகவும், தனது செயல்பாட்டுத் திட்டங்களை மதிப்பிடுவதற்காக இந்திய கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் இந்த கூட்டுப் பயிற்சியை 20 நாட்கள் நடத்தியது. கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையத் தலைமை அதிகாரியின் கீழ் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
இந்த கூட்டுப் பயிற்சியில், இந்தியக் கடற்படையின் 40 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. மேலும், சுகாய், ஜாக்குவர், விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம், அவாக்ஸ் ரேடாருடன் கூடிய விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை அனுப்பியது. கடற்படையின் கண்காணிப்பு விமானங்கள் பி8ஐ, டார்னியர், ஐஎல் 38, மிக் 19கே ரக விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றன. இந்திய ராணுவத்தின் படைப்பிரிவுகள், கடலோரக் காவல்படையின் கப்பல்களும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.
தற்போதைய கடல்சார் சவால்களை எதிர்கொள்ள, அனைத்துப் படைப்பிரிவுகளும் கூட்டாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் பயிற்சி வழங்கியது.
கருத்துகள்