வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ரூபாய் 50 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது
25.2.2022 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தூத்துக்குடி முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியது. வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் திரு டி.கே.ராமச்சந்திரன் I.A.S அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சென்னையில் தலைமைச் செயலகத்தில் சந்தித்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
கோவிட் பெரும் தொற்றினை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை முடுக்கி விட வேண்டிய அவசியத்தை உணர்ந்து தென் தமிழகத்தின் சரக்கு பரிமாற்ற நுழைவு வாயிலாக திகழும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தேவைகளை உணர்ந்து, கோவிட் பெரும் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ரூபாய் 40.5 லட்சம் செலவிலும் கோவிட் மருந்துகள் ரூபாய் 17.5 லட்சம் செலவிலும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ரூபாய் 1.5 லட்சம் செலவிலும் வழங்கியுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பாரதப் பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூபாய் 2கோடியும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூபாய் 50 லட்சமும் வழங்கியுள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை, பாரத பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூபாய் 14.79 லட்சத்தையும் வழங்கியுள்ளனர்
கருத்துகள்