காரைக்குடி திருச்சிராப்பள்ளி இடையில் மின் இரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் பல்லவன் சோதனை ஓட்டம்.
விரைவில் விருதுநகர் ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பு
விருதுநகர்-காரைக்குடி ரயில் விரைவில் வழக்கம்போல் திருச்சி வரை இயக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர்-காரைக்குடி டெமோ ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு வாரமும் புதுக்கோட்டை வழியாக சனி கிழமை காலை திருச்சிராப்பள்ளி செல்லும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து மீண்டும் இந்த ரயில் ஞாயிறு மதியம் திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று மதியம் இந்த ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. மேலும் இந்த டெமொ ரயிலின் பெயர் பலகை திருச்சிராப்பள்ளி⇋காரைக்குடி⇋விருதுநகர் என்றிருந்துள்ளது. இதற்கு முன் விருதுநகர்⇋காரைக்குடி என்று மட்டுமே பெயர் பலகை இருந்தது. இந்த டெமொ ரயிலின் தற்போதைய பெயர் பலகையை பார்க்கையில் இது தற்போது இயக்கப்பட்டுவரும் பல சிறப்பு ரயில்களில் பெயர் பலகையை போலவே உள்ளது. எனவே விரைவில் இந்த ரயிலுக்கான புதுக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி வரை நீடிப்பு அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை எழும்பூர் - காரைக்குடி சந்திப்பு இடையே பல்லவன் அதிவிரைவு ரயில் 25 பிப்ரவரி 2022 முதல் முழுவதும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுமென்ற தென்னக இரயில்வே அறிவிப்புகளின் படி
திருச்சிராப்பள்ளி - காரைக்குடி ரயில் பாதை முழுவதுமாக மின்மயமாக்கப்பட்ட நிலையில் முதல் மின்சார ரயிலாக பல்லவன் அதிவிரைவு ரயில் மின் எஞ்சின் கொண்டு காரைக்குடி சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டது.
கருத்துகள்