பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விசாரணை: மத்திய அமைச்சர் தகவல்
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இதர சட்ட பிரிவின் கீழ் சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று அவர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
சமூக இணையதளங்களை தவறாக பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்கள் நடைபெறுவது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இணையதளத்தின் அதிவேக வளர்ச்சியால், யாரும் எங்கிருந்தும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் எந்த தகவலையும் அனுப்பவோ அல்லது வெளியிடவோ முடிகிறது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
கருத்துகள்