இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் அதிகபட்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட கனரக வாகனங்கள் மற்றும் ட்ரெய்லர்களுக்கான அறிவிக்கை வெளியீடு
இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் அதிகபட்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட கனரக வாகனங்கள் மற்றும் ட்ரெய்லர்கள் எனப்படும் பின் இணைந்த ஊர்திகளுக்கான அறிவிக்கையை பிப்ரவரி 25-ம்தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஓட்டுநர் பிரிவை விட பாரம் ஏற்றும் பகுதி நீட்டிக்கொண்டிராதவாறு இருக்க வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989-ன் பிரிவு 93-ஐ திருத்த இது வகை செய்யும்.
40-50 இரு சக்கர வாகனங்களை ஏற்றும் வகையில் கொள்திறனை அதிகரிக்க இது உதவும்
கருத்துகள்