வேளாண்மை செய்யும் நிலங்களில் அரசு மதுக்கடைகளைத் திறக்கக்கூடாதென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரிலுள்ள அரசு மதுக் கடை திறக்க கூடாதென தடை விதிக்கக்கோரி, அவ்வூரைச் சேர்ந்த அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இவ் வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் இந்தப் பகுதி வேளாண்மை செய்யும் நஞ்சை நிலம் என்பதால் அரசு மதுக்கடை திறக்கப்போவதில்லை என்றும், சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்,
வேளாண்மை நிலங்களில் மதுக் கடைகளை அரசு அமைக்கக்கூடாது எனவும், சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
கருத்துகள்