முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உக்ரைனிலிருந்து தங்களின் குடிமக்களை மீட்டுவரும் பணியில் இந்தியாவும் மற்ற சில நாடுகளும்- ஓர் ஒப்பீடு

உக்ரைனிலிருந்து தங்களின் குடிமக்களை மீட்டுவரும் பணியில் இந்தியாவும் மற்ற சில நாடுகளும்- ஓர் ஒப்பீடு


உக்ரைனில் சீனாவைச் சேர்ந்த 6,000 பேர் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் குடிமக்களை வெளியேற்றும் திட்டங்களை ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் இந்தியா ஆபரேஷன் கங்கா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, இந்தியர்களை மீட்டு வருகிறது. உக்ரைனிலுள்ள சீனக் குடிமக்களுக்கு அந்நாடு பயண அறிவுரைகளை வெளியிடாமல் ஆதரவு நடைமுறைகளை மேற்கொள்ளாத நிலையில் இந்தியா தொடர்பு எண்கள், பயண அறிவுரைகள், ஆதரவு நடைமுறைகளை இந்தியக்


குடிமக்களுக்கு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 900 ஊழியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை அமெரிக்காவால் வெளியேற்ற இயலவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே மாதிரியான பயண அறிவுரைகளை வெளியிட்டுள்ளன. உதவிக்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளன. ஜெர்மனியும் தனது குடிமக்களை வெளியேற்றி கொண்டுவரும் நிலையில் இல்லை.


உக்ரைனுக்கான பிரிட்டன், ஜெர்மனி தூதரகங்கள் கீவ் நகரிலிருந்து மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியத் தூதரகம் அங்கேயே செயல்படுகிறது.

 உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத் தரவுகள் படி 80,000 சர்வதேச மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். இவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்றிக் கொண்டுவருவதற்கான ஆபரேஷன் கங்கா திட்டத்தை மிகத்தீவிரமாக செயல்படுத்தி வருகிறது உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது


உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.

 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  கீழ்க்காணுமாறு திருத்தி அமைத்துள்ளது.


இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஏர்-சுவிதா இணையப் பக்கத்தில் விமானப் பயணத்திற்கு முன் தொற்றின்மைக்கான பரிசோதனை அறிக்கை அல்லது முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றைக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருப்பவர்கள் இந்தியாவில் விமான நிலையத்திற்கு வந்தபின் அடுத்த 14 நாட்களுக்கு தங்களின் உடல்நிலையை அவர்களே கண்காணித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு, வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியாவிற்கு வருவதற்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறிக்கையை ஒரு பயணி அளிக்காமல் அல்லது கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை முழுமையாக நிறைவு செய்யாமல் வரும் போது அவர்கள் தங்களின் ரத்த மாதிரிகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம் 14 நாட்களுக்கு தங்களை தாங்களே கண்காணித்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுவார்கள்.  பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விதிமுறைகளின்படி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். உக்ரைனிலிருந்து விமானங்கள் வர அனுமதிக்கப்படாததால் போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற ஏற்பாடுகளை செய்துள்ளன. பின்னர் ஆபரேஷன் கங்கா விமானங்கள் என்ற திட்டத்தின் கீழ் அந்தந்த நாடுகளில் இருந்து இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

 2022 பிப்ரவரி 28 (நண்பகல் 12 மணி) நிலவரப்படி உக்ரைனில் இருந்து 1,156 பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 விமானங்கள் (மும்பையில் ஒன்று, தில்லியில் நான்கு) வந்துள்ளன. இந்த பயணிகளில் இதுவரை எவரும் தனிமைப்படுத்தி வைக்கப்படவில்லை உக்ரைன் மீது ரஷ்யா படை போர் தொடுத்தது என்று மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் ரஷ்யாவை குற்றம் சாட்டுகின்றன! அப்படியானால், உக்ரைனில் உள்ள ஒரு பகுதி மக்கள் ரஷ்யாவை ஏன் வரவேற்கிறார்கள்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விரித்த வலையில் எப்படி வீழ்ந்தது உக்ரைன்? அவர்களின் சூழ்ச்சி என்ன?

இந்தச் சூழலில், உக்ரைனின் இனப்படுகொலையைத் தடுக்கவே இந்த ராணுவ நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் ; நாங்கள் ஒருபோதும் உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கப் போவதில்லை‘ என்று ரஷ்யா கூறியுள்ளது 

ஒரு வகையில்,இந்தச்சூழல் நமக்கு வங்க விடுதலையை நினைவூட்டுகிறது. ஏனெனில், அன்று வங்க தேச மக்களை பாக். ராணுவப்படுகொலையினின்றும் காப்பாற்ற இந்தியா முனைந்தது. இந்திய அரசை அன்று ஆக்கிரமிப்பாளர்கள் என்று பாக். குற்றஞ்சாட்டியது.  இந்தியாவை பயமுறுத்த அன்று அமெரிக்கா கடற்படையை வங்காள விரிகுடாவிற்கு அனுப்பியது.  இந்திய படைகள் கிழக்கு பாக்.கில் நுழைந்தவுடன் இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடைகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏற்படுத்தியதை நாம் மறக்க இயலாது.

இந்தியாவில் எந்தப் படிப்புக்கும் இல்லாத வகையில் மருத்துவக் கல்விக்கு பெரிய மவுசையும், மாயத் தோற்றத்தையும் கட்டமைத்து எம்.பி.பி.எஸ் படிப்பதை சமூக அந்தஸ்தாகவே ஆக்கிவிட்டார்கள்! 

ஆனால், அரசு மருத்துவர்களுக்கு நியாயமான சம்பளம் உண்டா என்று பார்க்க வேண்டும்  இன்னொருபுறம் புற்றீசல் போல தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் அதில் ஒன்று 1986 ஆம் ஆண்டு வரை சென்னை நகரில் காய்கறிகள் வியாபாரம் செய்தவரின் கல்லூரி 

”இப்போது தமிழ் நாட்டில இன்ஜினியரிங் கல்லூரிகள் பெருகியதால பல கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் முன் வராமல் காத்து வாங்கும் நிலை. இன்ஜினியரிங் மாணவர்களில் 80 சதவீதத்தினருக்கு சரியான வேலை கூடக் கிடைக்கிற நிலை இல்லை. வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த நிலைமை வரலாம். 

டாக்டர்களுக்கு நோயாளிகள் காத்திருந்த நிலைமை மாறி, நோயாளிகளுக்கு டாக்டர்கள் காத்திருக்கும் நிலைமை விரைவில் வந்தே தீரும்!’’ 

மருத்துவம் மருந்து வணிகம் செய்யும் மாபியாக்களிடம் சிக்கிச் சிதையும் மருத்துவக் கல்வி!நடைபெற்றுவரும்,போர்க்களக் கொடூரக் காட்சிகளில் பற்றி எரியும் கட்டிடங்கள், சிதறிக் கிடக்கும் மனித உடல்களை பார்த்தால் நெஞ்சம் பதற்றம் காணும்!

இதை உலகம் முழுவதும் வாழும் மக்கள் பதற்றத்துடனும், சொல்லொண்ணா வேதனையுடனும் பார்க்கும் நிலை!

திரைப்பட நகைச்சுவை நடிகராக இருந்து அதிபரான ஜெலன்கிக்கு நாட்டு நலன் பேணும் நடைமுறை சார்ந்த அறிவிருப்பதாகவே தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் தூக்கி எறியப்பட வேண்டிய நேட்டோ அமைப்பில் சேர்ந்து செயல்பட துடித்திருக்கமாட்டார். அருகிலிருக்கும் சகோதர நாடான ரஷ்யாவை பகைத்துக் கொண்டு, அமெரிக்க நட்புக்கு ஆளாய் பறந்திருக்கமாட்டார்!

ரஷ்ய நாட்டு மக்களே இந்தப் போரை உடனே நிறுத்துமாறு புதினுக்கு அழுத்தம் தருகிறார்கள் என்றால், நடைபெறும் கொடூரத்தைச் சொல்லவும் வேண்டிய நிலை இல்லை ..ரஷ்யா-உக்ரைன் போர் களேபரத்தில் எப்படிப் பார்த்தாலும் உக்ரைனில் இந்தியாவின்  18,000 மாணவர்கள் அடுத்து என்ன செய்வது என திக்குத் தெரியாத காட்டில் சிக்கியவ நபர்கள் போல்  மிகமோசமான போர் சூழலில் சிக்கித் தவிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள். 

ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கி மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கிறது.‌ மேலும் அது உக்கிரமடையும் சூழலில் இந்திய மாணவர்கள் தத்தம் உயிரைப் பணயம் வைத்து அங்கே வாடும்  துர்பாக்கிய நிலை.‌ நடுங்கும் குளிர் பயமுறுத்தும் போர் தாக்குதல் இவற்றுக்கிடையே அம் மாணவர்கள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, தங்க பாதுகாப்பான இடமின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் நிலை.‌ இங்கே இந்தியாவில் அவர்களது பெற்றோர் மனநிலையை சற்றே நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது.  

இந்த மாதிரி போர் மூளும் அபாயகரமான நேரங்களில் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் / இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பாதுகாப்பு கருதி இந்திய தூதரகங்களில் போதுமான பணியாளர்கள் வசதிகள் ஒன்றிய அரசு ஏற்படுத்தி உள்ளதா? என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் ஆம் இருக்கு... எல்லா வசதிகளும் உண்டு என்று 

தற்போதைய நிலையில்... இந்திய மாணவர்கள் அனைவரையும்    பத்திரமாக மீட்டு தாய்நாடு திரும்பிட  பயணியர் விமான சர்வீஸ் 60 முறை பயணிப்பது மிகவும் அவசியம்.‌ ஆனால் இதுவரை‌ ஓரிரு விமானங்களில் மட்டுமே மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். அதாவது அங்கே சிக்கியுள்ள 18000 பேரில் இதுவரை 500-600 பேர் தான் திரும்பியுள்ளனர்.‌ 

அனைவரையும் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வர மேலும் பலமடங்கு தீவிரமாக பணியாற்றும் பொறுப்பு, கடமை அரசுக்கு உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் தத்தம் அரசியல் கருத்து வேறுபாடுகளை களைந்து... இந்தியர்களாக அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து பாடுபட வேண்டும். 

அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை உணர்ந்து மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும். என்பதே அணைத்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...