கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ன் கலாச்சார நிகழ்ச்சிகள் மிகவும் அருமை: விளையாட்டு வீரர்கள்
விளையாட்டு வீரர்கள் கடினமாக உழைத்து வரும் நிலையில், அவர்களை மகிழ்வித்து, சூழ்நிலையை உற்சாகமாக வைத்திருக்கும் பொறுப்பை, பெங்களூருவில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ஐ நடத்தும் ஜெயின் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஜெயின் பல்கலைக்கழக வளாகத்தில் 25 ஏப்ரல் 2022 முதல் 02 மே 2022 வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிக்காக, அதன் அமைப்பாளர்கள் அங்குள்ள ஒரு பெரிய மைதானத்தில் மேடையை எழுப்பியுள்ளனர். நடனம், இசை மற்றும் ஃபேஷன் காட்சி உள்ளிட்டவை இந்த எட்டு நாள் நிகழ்வின் போது நடத்தப்படுகிறது.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ல் கலந்துகொள்ளும் அனைவரும் (விளையாட்டு வீரர்கள், குடும்பத்தினர், தன்னார்வத் தொண்டர்கள் போன்றோர்) பங்கேற்கக்கூடிய இந்த கலாச்சார நிகழ்வில், காவேரி கைவினைப் பொருட்கள், சணல் பைகள் மற்றும் இயற்கை சோப்புகள் போன்ற சுவாரஸ்யமான பொருட்களுடன் கூடிய ஏராளமான அரங்குகளும் உள்ளன.
நாள் முழுவதும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் சமயத்தில், வளாகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், வலுவான பாதுகாப்பு அமைப்பை கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ன் ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து, ஜெயின் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கலாச்சார ஒருங்கிணைப்பாளரும், மாணவியுமான நிகிதா சில் கூறுகையில், "ஜெயின் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடனம், இசை மற்றும் பேஷன் ஆகியவற்றுக்கு குழுக்கள் உள்ளன. கலாச்சார நிகழ்வில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு கலை வடிவங்களுக்கும் கல்லூரிகள் தங்கள் குழுக்களை அனுப்பியுள்ளன. பல்கலைக்கழகத்தில் ஆறு வளாகங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு வளாகமும் நான்கைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறது," என்றார்.
கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி பி எழில்மதி கூறுகையில், “அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு கலாச்சார நிகழ்வுகளுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் நடனமாடியதோடு, இசையையும் ரசித்தோம். அரையிறுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதிப் போட்டி குறித்து நாங்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்தோம். எனவே, கலாச்சார நிகழ்விற்குச் சென்றது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது," என்றார்.பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 2021-கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில், 26 சாதனைகள் படைக்கப்பட்டிருப்பதுடன், பளு தூக்குதலில் ஒரு தேசிய சாதனை முறியடிக்கப்பட்டது
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி - 2021-ல் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் கோமல் கோஹர், பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பளு தூக்குதல் போட்டியின் 45 கிலோ எடைப்பிரிவில் மூன்று பிரிவுகளிலும் (ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க், ஒருங்கிணைந்து) முந்தைய சாதனையை முறியடித்தார். கேலோ விளையாட்டுப் போட்டியில் 20 பிரிவுகளில் 26 புதிய சாதனைகளும், ஒரு தேசிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான 87 கிலோ எடை பிரிவில் ஆன் மரியா, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் தேசிய சாதனையை முறியடித்தார். அவர் 129 கிலோ எடையை தூக்கி, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தேசிய சாம்பியன் ஷிப் போட்டியில் மன்பிரீத் கவுரின் 128 கிலோ சாதனையை முறியடித்தார்.
மார்ச் மாதம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆன் மரியா, மொத்தம் 231 கிலோ எடையைத் தூக்கி தேசிய கூட்டு சாதனையை முறியடித்தார். 101 கிலோ ஸ்னாட்ச் பிரிவில், அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
கருத்துகள்