பஞ்சு இறக்குமதி மீதான அனைத்து சுங்கத்தீர்வையையும் 2022 செப்டம்பர் 30 வரை அரசு விலக்கியுள்ளது
பொதுமக்கள் நலன் கருதி பஞ்சு விலையைக் குறைப்பதற்காகப் பஞ்சு இறக்குமதி மீதான அனைத்து சுங்க வரிகளுக்கும் விலக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலக்கு ஜவுளித் துறையின் தொடர் நடைமுறைக்கான - நூல், ஆடைகள், துணிகள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றுக்குப் பயன்படுவதுடன் ஜவுளித் துறைக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும்.
கச்சா பருத்தி மீதான அடிப்படை சுங்கத் தீர்வை 5 சதவீதத்தையும், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூடுதல் வரி 5 சதவீதத்தையும் நீக்க வேண்டும் என்று இந்தத் தொழில்துறை கோரியிருந்தது.
பஞ்சு இறக்குமதிக்கான சுங்கத் தீர்வை மற்றும் வேளாண் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கு மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகளுக்கான மத்திய வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிக்கை 2022 ஏப்ரல் 14லிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இது 2022 செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்.
கச்சா பருத்தி மீதான இறக்குமதி தீர்வை நீக்கப்படுவது இந்தியாவில் பஞ்சு விலையில் வரவேற்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
கருத்துகள்