தியோகரில் மீட்புப் பணிகளை இந்திய விமானப்படை நிறைவு செய்தது
தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் ராணுவத்துடன் நெருங்கி பணியாற்றி, ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலை ரோப்வே சேவை விபத்தில் சிக்கித் தவித்த 35 நபர்களை இந்திய விமானப்படை இன்று மீட்டது.
இரண்டு எம்ஐ-17வி5, ஒரு எம்ஐ-17, ஒரு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மற்றும் ஒரு சீட்டா உள்ளிட்டவற்றை 26 மணி நேரத்திற்கும் மேலாக இந்த முயற்சிக்காக விமானப்படை பயன்படுத்தியது.
ஐந்து கருட் கமாண்டோக்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரின் வின்ச் கேபிளுடன் அவர்கள் இணைக்கப்பட்டு, வெளியில் இருந்து அதை அணுகி, உயிர் பிழைத்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர். சவால்களை எதிர்கொண்டு ஆபத்தான சூழலில் இந்தப் பணியில் கமாண்டோக்கள் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, உதவி மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான இந்திய விமானப்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துகிறது. விபத்தில் உயிரிந்தோரின் குடும்பங்களுக்கு விமானப்படை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
கருத்துகள்