கோடை காலம் துவங்கியதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோடை கால விடுமுறையென உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலம். தினசரி வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும். ஆகவே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலம் தொட்டு நீதிமன்றங்களுக்கு. மே மாதம் விடுமுறை விடப்பட்டே வந்த நிலையில் ஆண்டு தோறும் அதை பின்பற்றி விடுமுறை வழங்கிய நிலையில் மேலும் தற்போது கொரோனா பரவல் மூன்றாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பலவாறான பணிகளை மேற்கொள்கிறது. இச் சூழ்நிலையில் வெயிலின் தாக்கத்தையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்னகிறதனைத்
தொடர்ந்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்திற்கு மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கலும், வியாழக்கிழமை விசாரணையும் நடைபெறுமென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைமைப் பதிவாளர் தனபால் அறிவிப்பு மூலம் நீதிபதிகள் இந்த கோடை விடுமுறை காலத்தில் சுழற்சி முறையில் பணிபுரிவார்களென தெரிவித்தார்.
மேலும் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகளின்
பணி நேர அறிக்கையையும் வெளியிட்டார்.
கருத்துகள்