அணு விஞ்ஞானி டாக்டர் அருண்குமார் பாதுரி மறைவுக்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இரங்கல்
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஹோமி பாபா இருக்கையில் பணியாற்றிவந்த விஞ்ஞானி டாக்டர் அருண்குமார் பாதுரி மாரடைப்பு காரணமாக கல்பாக்கத்தில் 27.4.2022 பிற்பகல் காலமானார். காரக்பூர் ஐஐடியில் உலோகவியல் பொறியியல் பட்டப்படிப்பும், ஆராய்ச்சி முனைவர் பட்டமும் பெற்ற டாக்டர் அருண்குமார் பாதுரி, 1983-ம் ஆண்டு டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சி பள்ளியில் இணைந்து அணுசக்தி துறையில் பயிற்சி பெற்றார். பின்னர் 1984-ம் ஆண்டு கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்த அவர், ஜூலை 1, 2017 முதல் 31.8.2021 வரை அந்த மையத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் இந்த மையத்தில் உள்ள ஹோமி பாபா ஆராய்ச்சி இருக்கையில் பணியாற்றிவந்தார்.
பொருட்கள் இணைப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர், சர்வதேச அளவிலான 2 காப்புரிமைகளை பெற்றுள்ள டாக்டர்
ஏ கே பாதுரி, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்