அஞ்சல் துறை ஆன்லைன் மூலம் தேசிய ஒய்வூதிய திட்டம் NPS சேவைகளை வழங்குகிறது
தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை (DoP), தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS - அனைத்து குடிமக்களுக்கான மாதிரித் திட்டம்), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் இந்திய அரசின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை, அதன் குறிப்பிட்ட சில அஞ்சலகங்கள் மூலம் 2010-ம் ஆண்டு முதல் நேரடியாக வழங்கி வருகிறது.
அஞ்சல் துறை தேசிய ஓய்வூதியத் திட்டத்தை NPS (அனைத்து குடிமக்களுக்குமான மாதிரித் திட்டம்) 2022-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் வழங்கி வருகிறது.
18-70 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் எவரும் "தேசிய ஓய்வூதிய அமைப்பு -ஆன்லைன்" என்ற மெனு தலைப்பின் கீழ் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.indiapost.gov.in) சென்று இந்த ஆன்லைன் வசதியைப் பெறலாம்.
குறிப்பிட்ட இணைப்பிற்கான இணையதள முகவரி: https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/NPS.aspx
இந்த இணையதளத்தில் புதிய பதிவு, ஆரம்ப / அடுத்தடுத்த பங்களிப்பு மற்றும் முறையான முதலீட்டுத் திட்டம் SIP / Options போன்ற வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். அஞ்சல் துறையின் NPS சேவைக் கட்டணம் மிகக் குறைவானது. சந்தாதாரர்கள் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, வருமானவரிச் சட்டம் பிரிவு 80CCD 1(B)-ன் கீழ் NPS-ல் வரி கழிவு பெறத் தகுதியுடையவர்கள்.
கருத்துகள்