மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா மே 16-22 பிரேசில் விஜயம்
பிரேசில் நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் மார்கோஸ் மான்டெஸ் கார்டீரோவின் அழைப்பை ஏற்று, கடந்த 16-ம் தேதி பிரேசில் நாட்டுக்கு பயணம் சென்ற மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா, 22-ம் தேதி இந்தியா திரும்பினார்.
இந்த பயணத்தின்போது, இருநாடுகளிடையே பரஸ்பரம் நன்மை பயக்கும் உறவுகளை மேலும் வலிமைப்படுத்த இருநாட்டு அமைச்சர்களும் ஒத்துக் கொண்டனர். பின்னர் பிரேசிலியன் அசோசியேஷன் ஆஃப் ஜெபு ப்ரீடர்சின் தலைவர், பிரேசிலிய விவசாயம் மற்றும் கால்நடை கூட்டமைப்பு, பிரேசிலிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் உபெராபா நகர மேயர் ஆகியோரை மத்திய அமைச்சர் ரூபாலா சந்தித்தார்.
அப்போது, இருநாடுகளிடையே பால்வளத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஒத்துழைப்பை நல்குவது குறித்து விவாதித்தார். மேலும், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாட்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட அமைச்சர் ரூபாலா, பிரேசிலியா நாட்டு யோகா ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
ஆயுர்வேதத்தை மேம்படுத்தும் விதமாக, பிரேசிலிய ஆயுர்வேத நிபுணர் டாக்டர். ஜோஸ் ருகுசுடன் இணைந்து, இந்திய தூதரகத்தால் மொழிபெயர்க்கப்பட்ட 'பேராசிரியர் ஆயுஷ்மான்" என்ற புத்தகத்தை அமைச்சர் ரூபாலா வெளியிட்டார்.
தொடர்ந்து பிரேசில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கலந்துக் கொண்டார்.
கருத்துகள்