164 வது சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டதுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என். ரவியும் கலந்து கொண்டனர். ”நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கின்றன. நீட் தேர்வு என்பது சமுக நீதிக்கு எதிரானது. 12-ஆம் வகுப்பு மதுப்பெண் அடிப்படையில்தான் மருத்துவக் கல்விக்கான சேர்க்கை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மாணவர்கள் சமூக நீதிக்கான தேவை பற்றிய புரிதலோடு இருக்க வேண்டும்” என மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. பேசினார். சென்னை பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக ஆளுநரும், சென்னை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகிக்கிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்கள் விழாவில்
பேசிய உயர் கல்வித்துறைத் அமைச்சர் பொன்முடி, இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதல்வர் எனப் பாராட்டினார். கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி இன்னும் வளரும் ; அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோமென்று கூறினார். மேலும்
நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்கும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு, டிகிரி உள்ளிட்ட பட்டபடிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அமைய அரசு உறுதியாக உள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பலன் அளிக்காது.
மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தில் சமூக நீதிக் கொள்கையுடன் செயல்பட வேண்டும். கல்வி மாநில உரிமையிலிருக்க வேண்டும் என்பதையே ஆளுநரிடம் கோரிக்கையாக விடுகிறோம். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி எனக் குறிப்பிட்டார். ராஜகோபாலச்சாரி, சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, அப்துல்கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்தார்.
கருத்துகள்