தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு 2022 கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக வாய்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு
2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி 5529 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. இதனிடையே, குரூப் 2 முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு, ஒரு பதவிக்கு 10 பேர் (1:10) என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடைசி கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், அதே கட் ஆஃப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றிருந்தால், 100 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தகுதி செய்யப்படுவார்கள். எனவே, 5529 பணியிடங்களுக்கு 55000க்கும் அதிகமானோர் தேர்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில்,
தற்போது சுமார் 60,000 பேர் வரை அல்லது அதற்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில், முதல்நிலைத் தேர்வில் தமிழ் மொழிப்பாடம் மற்றும் கணித வினாக்கள் சற்று எளிமையாக இருந்தாலும், பொது அறிவுப் பகுதி வினாக்கள் கடினமாக இருந்ததால், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்