2022 – 24 க்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
2022 மே 7-ல் பிலிப்பைன்சின் மணிலாவில் அண்மையில் நடைபெற்ற நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 2022 –24 க்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைவராக இந்தியா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக மணிலா தேர்தல் ஆணையம் இருந்தது. நிர்வாகக்குழுவின் புதிய உறுப்பினர்களாக ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகியவை தற்போது இணைக்கப்பட்டுள்ளன.
மணிலாவில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் துணைத்தேர்தல் ஆணையர் திரு நிதிஷ் வியாஸ், மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு ராஜேஷ் அகர்வால், ராஜஸ்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு பிரவீன் குப்தா ஆகிய 3 உறுப்பினர் பிரதிநிதிகள் குழு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பங்கேற்றனர். 2022- 23 க்கான வேலைத்திட்டமும், 2023 -24 க்கான எதிர்கால செயல்திட்டங்களும் நிர்வாகக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன. அனைவரையும் உள்ளடக்கிய, பங்கேற்புமிக்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் அரசியல் நடைமுறைகளில் உள்ள தடைகளை நீக்குவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு ஒருங்கிணைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தலையீடுகளை எடுத்துரைக்கும் “தேர்தல்களில் பாலின பிரச்சனைகள்” என்பதற்கான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
பிலிப்பைன்சின் மணிலாவில் 1997 ஜனவரி 26 - 29-ல் நடைபெற்ற 21-ஆம் நூற்றாண்டில் ஆசிய தேர்தல்கள் குறித்த உரைக்கோவை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து 1998-ல் ஆசிய தேர்தல் ஆணையங்களின் சங்கம் அமைக்கப்பட்டது. தற்போது இதில் 20 ஆசிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளன.
கருத்துகள்