கடந்த ஆட்சியில் அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்டதால் 25,000 பேர் தற்போது பணி ஓய்வு பெறுகின்றனர்.
தற்போதய நிலையில் மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் கூடுதலாக உருவாகியுள்ள நிலையில்.
புதிய நடைமுறைகளின் படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் 25,000 பணியிடங்களும் சேர்ந்து காலியாவதனைத் தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படவுள்ளது. பணி ஓய்வு ஆங்கிலத்தில் Retirement from Service என்பது குறிப்பிட்ட வயது எய்திய ஊழியரை, அவர் செய்யும் பணியிலிருந்து பணி வழங்குபவர் முற்றிலுமாக விடுவிப்பதாகும்.
மேற்கோள்கள்:- பெருஞ்சாலையை விட்டு விலகி, காப்புள்ள ஓரிடத்தில் போய்த் தங்கியிரு. ஏனெனில், சாலையருகிலுள்ள மரத்தில் காய் காய்த்தால், அது கனியும்வரை இராது. - கிரிஸோஸ்டம் கருத்து
ஓய்வெடுத்துக்கொண்டு ஒதுங்குவதை நன்கு அனுபவிப்பதற்கு, அடிப்படையான நல்ல உலகியல் அறிவும், படிப்பில் ஆர்வமும் வேண்டும் அப்பொழுதுதான் ஓய்வின் இனிமை தெரியும். - டிரைடன் கருத்து
உலகம் நீ ஒய்வெடுத்துக்கொண்டு ஒதுங்குவதற்காக வருந்தும் வரை ஒதுங்க நினைக்காதே. செருக்கினாலோ, கோழைத்தனத்தாலோ, சோம்பலினாலோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் மனிதன், அங்கே வெறுமே உட்கார்ந்து, உறுமிக்கொண்டிருப்பதை நான் வெறுக்கிறேன். நான் செய்வதைப் போல வெளியே வரட்டும். வந்து குரைக்கட்டும். - ஜான்ஸன் கருத்து.!
கருத்துகள்