மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெறுமெனத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது
வேட்புமனு தாக்கல் தேதி முடிவடைய உள்ள நிலையில் அதற்கு முன் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வந்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் போட்டியிடலாம் என்று தகவல் வெளியான போதிலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக காலதாமதம் நிலவியது. இந்தச் சூழ்நிலையில் இராஜ்ய சபா வேட்பாளரைத் தேர்வு செய்யக் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்திலிருந்து இராஜ்ய சபா தேர்தலுக்குக் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ப. சிதம்பரம் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கருத்துகள்