பல்லக்கிற்கு சிவிகை என்றொரு பெயருண்டு.
"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (திருக்குறள் அதிகாரம் எண்:37).
பல்லக்கு என்பது கோவில்களில் சுவாமிகள் வீதி வலம் வர மற்றும் அரச குலத்தினர்களையும், மடாதிபதிகளையும் தூக்கிச் சுமந்து செல்ல பழங்கால முறையில் பயன்படுத்திய, மூடப்பட்ட ஒரு தூக்கி,
குறைந்த பட்சம் நான்கு பேரால் தூக்கி சுமக்கப்படுவது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பல்லக்கு தூக்கும் நபர்கள் பலர் மாறி மாறி தூக்கி வரும் பழக்கம் இருந்தது. கோவில் உற்சவரை வீதி வலம் வரும்போது சுமந்து வருவது மூடப்படாத, திறந்த நிலை பல்லக்கு. இதை கோவில் உற்சவத்தில் உம்பலங்கள் அல்லது பட்டயதார்கள் தூக்கி வரும் நிகழ்வுகளுக்கு அதற்கு உணவு அல்லது கோவில் அச்சடித்து வழங்கும் பிரசாதம் தான் கூலி ஆகும். இதுவே பழங்காலத்திலிந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்லக்கு என்பது ஆங்கிலத்தில் Palaquin; ஹிந்தியில்: पालकी, डोली) ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து கொள்ள நால்வர் பல்லாக்குக் கோல்களை தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி. அதோடு நிறுத்தி வைக்கும் முட்டுக்கட்டை கொண்டு செல்வர் பல்லாக்கைச் சுமப்போர் பல்லக்குத் தூக்குவோர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இரவில் சென்றால் அதற்கு தீவெட்டி தூக்கி வரும் தடியான நபர்கள் முன் செல்வர். இதற்கு சிவிகை, ஆந்தோணி, தண்டிகை, அந்தளம், கச்சு என சில பெயர்களுமுண்டு. முத்துப் பல்லாக்கு, இரத்தினப் பல்லாக்கு, பூ பல்லாக்கு என்று பல வகையிலும் உள்ளன. அப்படி மரபுவழி வந்த தருமபுரம் ஆதீனம் தற்போது பல்லக்கு மூலம் நகர் வலம் வரும் நிகழ்வு 500 ஆண்டு பாரம்பரிய விழாவாக ஆண்டு தோறும் நடத்தப்படும் அதில் தற்போது தடையானதால் "உயிரைக் கொடுத்தாவது தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்"
என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து உம்பலதார்கள் (மனிதர்கள்) தூக்கிச் செல்வதை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தடை விதித்துள்ள நிலையில் 293 வது மதுரை ஆதினம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, 500 ஆண்டுகளாக நடைபெறும் பழக்கம் இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும். இதன் உள் நோக்கம் என்ன? தருமபுர ஆதினமும், துருவாவடுதுரை ஆதினமும் இது போன்று பட்டினப் பிரவேசம் செய்வது தடுப்பது ஏன் ? ஆன்மீகத்தில் அரசியல் வாதிகள் தலையீடு உள்ளது. தமிழக முதல்வரே முன்னின்று இந்த நிகழ்வை நடத்தி வைக்க வேண்டும். தடை செய்யப்பட்டதை நினைத்து நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தேன்.
பட்டினப் பிரவேசம் தடை தொடர்ந்தால், சொக்கநாதரிடம் முறையிடுவேன். நானே சென்று பட்டினப் பிரவேசம் நடத்துவேன். ஏனென்றால் நான் அந்த மடத்தில் வளர்ந்தவன். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிகாலத்திலே, பட்டினப் பிரவேசம் நடந்தது. கலைஞர் காலத்தில் நடந்தது. தடையை நீக்கா விட்டால் நானே தடையை மீறி பட்டினப் பிரவேசம் நடத்துவேன். எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, தருமபுரம் ஆதினம் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்.தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு மனிதர்கள் தூக்க அனுமதி மறுத்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். காலங்காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி குருவிற்கு நாங்கள் அளிக்கும் மரியாதை அதை மாற்றக்கூடாதென்றும் தெரிவித்துள்ளனர். தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு, வருவாய் கோட்டாட்சியர் நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு மதுரை ஆதீனம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப்பிரவேசத்தை நடத்துவேன் என்றும் எனது குருவிற்கு நானே பல்லக்கு சுமப்பேன் என்றும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்க அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்து, தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு மதுரை ஆதீனம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆதீனம் !
முதுகலைப் பட்டம்,. ஆய்வியல் விளைஞர் பட்டம் ,முனைவர் பட்டம் பெற்றவர்.
ஒருவரின் நிலையை பற்றி ஸ்கேனர் இயந்திரத்தை விடவும் வேகமாகவே கணிக்க கூடிய வல்லமை கொண்ட
ஒருவர் தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். .மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பாஜக ஆதரவு கொண்ட அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர். தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார். ``ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படியும் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" எனக் கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார். கர்நாடகா போன்று தமிழக ஆதினங்கள் இணைந்து செயல்பட ஆளுநர் மூலம் முயற்சி தொடர்ந்து வருகிறதா என்று பல்வேறு வகையான கருத்து உலா வரும் நிலையில்.
தருமை ஆதினம் என்று அழைக்கப்படும் தருமபுரம் ஆதினத்தை பல்லாக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சியை தடை செய்து கோட்டச்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஆளுநர் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக ஆதினம் செயல்பட்ட காரணத்தால் தமிழக அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாதாகப் பேசப்படுகிறது, அதே நேரத்தில் தமிழக அரசின் இந்த செயலுக்கு மிக பெரிய பின்விளைவுகள் இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஆதீனங்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டு வரும் நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மயிலாடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் வழக்கிற்கு தடை விதிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜியின் உத்தரவு காரணமாக ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆதினத்திற்கு கடந்த மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்து ஆதினத்தின் முக்கிய நிகழ்வை தொடங்கி வைத்தார், அப்போது பேசிய தருமை ஆதினம் தமிழக ஆளுநர் ரவியின் பெயருக்கு சூரியன் என்று பெயர், தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் ஆட்சியில் இருப்பதாக பொருள்படும் படி தெரிவித்ததாகவும், அத்துடன் அவரது முகநூல் பக்கத்திலும் ஆளுநருக்கு ஆதரவாக புகைப்படங்களைப் பகிர்ந்ததாகவும். இந்த நிலையில்
பல்வேறு மாடாதிபதிகளைச் சந்திக்க முதல்வர் விரும்புவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடம் இருந்து சமீபத்தில் ஆதினங்களுக்கு அழைப்பு சென்றது.
அப்போது முதல்வரைச் சந்தித்த தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி 28ஆவது குருமகா சன்னிதானம், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர், திரு கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீ காமாட்சிதாஸ் சுவாமிகள் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார்கள் தருமை ஆதினம் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது அரசு அவர்கள் கொள்கையை பார்க்கிறது, நாங்கள் எங்கள் கொள்கையைப் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்
மேலும் தமிழகத்தில் நடப்பது ஆன்மீக ஆட்சிதான் என குறிப்பிட்டார்,இந்த சந்திப்பு நடந்த சில நாட்களில் இப்போது தருமை ஆதினம் பல்லாக்கு நிகழ்ச்சியை தடை செய்து வருவாய் கோட்டச்சியர் உத்தரவு பிறப்பித்திருப்பது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. குறித்து நமது நட்பில் சார்ந்த ஆதினத்தைச் சேர்ந்த சில முக்கிய சைவ சித்தாந்த பிரமுகர் மூலம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் சற்று ஆச்சர்யத்தை கொடுத்தது, முதல்வர் சந்திப்பின் போது பல ஆதினங்கள் அரசு சார்பில் தங்களுக்கு கொடுக்கப்படும் அழுந்தங்களை பட்டியல் போட்டனர், மேலும் தமிழகம் ஆன்மீக பூமி எனவும் இங்கு சைவ சமயத்திற்கு பல்வேறு அடக்குமுறைகள் உண்டாவதாகவும் குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது,
மேலும் தமிழகத்தில் உள்ள ஆதினங்கள் எல்லாம் ஆளும் அரசிற்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என பேசப்படுகிறது குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து மடாதிபதிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அங்கு அவர்கள் தீவிர பாஜக நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர், கர்நாடகவை காட்டிலும் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆதினங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதே நிலை நீடித்தால் கிறிஸ்தவ பாதிரியர்கள் போன்று சைவ ஆதினங்களும் களத்திலிறங்கும் என்பதால் ஆதினங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர இது போன்ற முயற்சிகள் அவர்கள் தொடங்கி நடத்தி வருவது பற்றி குறிப்பிட்டனர்.
பல்லாக்கு தூக்குவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் இல்லை அப்படி இருக்கையில் தடை செய்த சம்பவம் நிச்சயம் ஆளும் கட்சிக்கு எதிராகவே முடியும் பொறுத்து இருந்து பாருங்கள் இதற்கு பதிலடியாக ஆதினங்கள் அனைத்தும் கர்நாடக போன்று ஒன்று சேர்ந்து தீவிர அரசியலில் இறங்க போகின்றன, மாவட்ட நிர்வாகம் மூலம் ஆதினங்களுக்கு ஆளும் அரசு அழுத்தம் கொடுத்தால் ஆளுநர் மூலம் ஆளும் அரசிற்கு அழுத்தம் கொடுக்க சிவன் துணை இருப்பதாக சற்று மனம் தளராமல் தெரிவிக்கின்றனர் ஆதினம் தரப்பினர்.
எது எப்படியோ ஆதினங்கள் ஏற்கனவே மதுரை ஆதினம் தீவிரமாக தனது கருத்தை தெரிவிக்க தற்போது தருமை ஆதினமும் விரைவில் தீவிர தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க இந்த பல்லக்கு தடை சம்பவமும் ஒரு காரணமாக அமைந்துவிட போகிறது. மேலும் இந்த உத்தரவு நீதிமன்றத்தில் தீர்வு பெறவேண்டிய நிலையில் தான் தற்போது உள்ளது. அதுவே இறுதியாக நிலையான உத்தரவாக அமையும்.
கருத்துகள்