அறிவார்ந்த வெளியீடுகள் குறித்த செய்முறைப் பயிற்சியின் தேசிய பயிலரங்கம்
புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் அறிவியல் தகவல்தொடர்பு மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி சஞ்சிகைகள் பிரிவு, மே 12-18 வரை “அறிவார்ந்த வெளியீடுகள் குறித்த செய்முறைப் பயிற்சி” என்ற ஒருவார கால தேசிய பயிலரங்கை நடத்தி வருகின்றது. அறிவியலை துரிதப்படுத்து என்னும் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதி உதவியுடன் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது.
பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவண மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.எஸ். ராவ் இந்தப் பயிலரங்கை மே 12-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
துவக்க நிகழ்ச்சிக்குப் பிறகு ஆராய்ச்சி சஞ்சிகைகள் (உயிரியல் அறிவியல்) பிரிவின் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி திரு ஆர். எஸ். ஜெயசோமு இரண்டு தொடர்ச்சியான விரிவுரைகளுடன், ஆராய்ச்சி தகவல்தொடர்பு சம்பந்தமான அமர்வை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஆராய்ச்சி கையெழுத்துப் பிரதிகளை முதற்கட்டமாக திருத்துவது மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு-கேர் சாளரத்தைப் பயன்படுத்தி சஞ்சிகைகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது பற்றிய செய்முறைப் பயிற்சியை அவர் அளித்தார்.
கருத்துகள்