பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளரான பாலச்சந்திரனுக்கு காவல்துறை பாதுகாப்பை மீறி நடுரோட்டில் வெட்டிப்படுகொலை.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலச்சந்தர் , மத்தியசென்னை பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைப்பான ஆதிதிராவிடர் பிரிவுக்கான மாவட்டத் தலைவர் நேற்றிரவு 7.50 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நின்று கொண்டிருந்தவருக்கு பாதுகாப்புக்காக உடன் சென்ற துப்பாக்கி ஏந்திய காவலர் பாலகிருஷ்ணன், அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்ற போது, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை நடுரோட்டில் திடீரென்று சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் பினமானார் சம்பவ இடத்திலேயே, பின்னர் அந்தகா கும்பல் தப்பியோடியதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை பாலசந்தரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு கொலை நடந்த இடத்திலிருந்து கொலையாளிகளின் தடயம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட நிலையில் கொலையாளிகளை விரைவாகப் பிடிக்க மூன்று காவல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் ஐந்து தனிப்படை அமைத்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தனிப்படை காவல் துறையினர் கொலை செய்தவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தருகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பானது.கொலை செய்யப்பட்ட பாலச்சந்தருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டலிருந்து வந்துள்ளதன் காரணமாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டார் அது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,
முன் விரோதம் மற்றும் பண விவகாரம் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருக்கலாமெனத் தெரிய வந்துள்ளதாகவும் மேலும், இறந்துபோன பாலசந்தர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையிலுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கொலை வழக்கில் மூன்று பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாகவும், பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய், மற்றொருவர் ரவுடியான கலைவாணன் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் பாலச்சந்திரனுக்கு பாதுகாவலராக கடந்தாண்டில் வீரபத்திரன் என்ற காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதே, அவரிடம் பிரதீப், சஞ்சய் மற்றும் கலைவாணன் ஆகிய மூவரும் பாதுகாவலர் வீரபத்திரனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரதீப் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் வெளியில் வந்துள்ளான்.
நேராக பாலச்சந்தரின் உறவினரின் துணிக்கடைக்கு சென்று என் வழியில் அடிக்கடி குறுக்கே வருகிறான் பாலச்சந்தர். அவரைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணனிடம் எத்தனை நாள் பாதுகாப்பு கொடுப்பீர்கள் என்று பார்ப்போம். என்றாவது ஒருநாள் அவரை தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறியுள்ளனர். இப்படி ரவுடி பிரதீப் சபதம் போட்டு பாலச்சந்தரை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாதுகாப்புக்கு இருந்த ஆயுதப்படை காவலர் டீ சாப்பிடுவதற்காக அருகிலிருந்த கடைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் டூவீலரில் வந்த ஒரு கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது ..காலம்சென்ற இந்து முன்னணியின் தலைவர் இராம.கோபாலன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டபோது அவருக்கு பணிவிடை செய்ய பாலச்சந்தரை நியமித்தனர் அப்போது அவரது வீட்டிலிருந்து நகை பணம் திருடியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது ..
இந்து முன்னணியிலிருந்து விலகி இந்து மக்கள் கட்சியில் இணைந்து உள்ளார் அப்போது இந்து மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம் திறப்பு அன்று மாலை அர்ஜுன் சம்பத் வருகிற நேரத்தில் மாட்டு தலை அலுவலகம் முன்பு அவரே போட்டு பிறர் மீது பழி போட்ட சம்பவத்தை அறிந்த அர்ஜுன் சம்பத் இவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதன் பிறகு காவல்துறை விசாரணையில் மாட்டு தலையை சென்னை புளியாந்தோப்பிலிருந்து இவரே வாங்கி வந்து தனது அலுவலகம் முன்பு போட்ட விபரம் காவல்துறை விசாரணையில் தெரிந்தது அப்போது அதிமுக ஆட்சி நடந்த நிலையில் மதக் கலவரங்களை உருவாக்க நினைத்த பாலச்சந்தரைக் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பொறுப்பு வாங்கினார் அதன் பிறகு தனக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது எனக் கூறி பாதுகாப்பு வாங்கி ஆயுத காவலருடன் பாலச்சந்தர் இருந்து வந்த நிலையில்
உள்ளூர் ரவுடிகளை எதிர்த்து தன்னை பெரிய ஆளாகக் காட்டி கொள்ள காவல்துறை பாதுகாப்புடன் பிரபல ரவுடி தர்கா மோகன் ஆட்கள் பிரதீப், கார்த்திக் ஆகியோருடனே அடிக்கடி மோதல் போக்கை கையாண்டு வந்ததாகவும்
ஆறு பேர் கொண்ட கும்பல் இவரை கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது ..
மேலே கூறப்பட்ட பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இது கட்சியின் விவகாரத்தில் நடந்த கொலையா ? அல்லது சொந்த விவகாரத்தில் கட்சி இதுவரை இவரைக் காப்பாற்றி வந்ததா என்பது விசாரணை முடிவில் தெரியும்.
காவல்துறை விசாரணையில் உண்மை வெளியே வரும் அதுவரை பல வகையான விவாதம் பேசப்படுகிறது. இயல்பானதே.
கருத்துகள்