பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மை பலத்துடன் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து,
முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம். ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, வாட்ஸ் அப் எண்களையும் அறிவித்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஊழலற்ற ஆட்சியைக் கொண்டுவருவோம் என்பதை மையப்படுத்தியே தேர்தல் பிரச்சாரம் நடந்த நிலையில். தற்போது ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவி இழந்து பின்னர் கைதாகிய நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,
``பகவந்த் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்துப் பெருமைகொள்கிறது'' எனப் பதிவிட்டிருக்கிறார். பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு ஒரு சதவீதம் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது தொடர்பாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதையத்து, விஜய் சிங்லா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
இந்த ஊழல் புகார் தொடர்பாக இவர் மீது விசாரணை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனே இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு சிங்லாவைக் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் மற்ற மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஒப்பந்தங்களுக்கு ஒரு சதவீதம் கமிஷன் கேட்டதாக எழுந்த புகாரில் ஆதாரங்கள் கிடைத்ததால் விஜய் சிங்லாவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.
கருத்துகள்