முழுமையான பங்கு விலக்கல் மற்றும் ஓரளவு பங்கு விற்பனைக்கான மாற்று நடைமுறைகளுக்கும், அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல்
பங்கு விலக்கல் மற்றும் துணை நிறுவனங்கள் அதன் கிளைகளை மூடுவதற்கும் மற்றும் கூட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கும் தேவையான மாற்று நடைமுறைகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கவும் ஒரு நிறுவனத்தின் / அதன் தாய் பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரைப்பதற்கான அதிகாரம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரு பொதுத்துறை நிறுவனம் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கோ பரிந்துரைப்பதற்கு ஏற்ப, கூடுதல் அதிகாரம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முழுமையான பங்கு விலக்கல் மற்றும் ஓரளவு பங்கு விற்பனைக்கான மாற்று நடைமுறைகளுக்கும், அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய விதிமுறைகளின்படி மகாரத்னா, நவரத்னா, மற்றும் மினிரத்னா வகையைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு, அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் அல்லது அவற்றைக் கையகப்படுத்திக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பங்கு விலக்கல் அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு தேவையான அதிகாரம் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் பங்கு விலக்கல் பங்கு விற்பனை அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அல்லது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான புதிய கொள்கையின்படி இந்த கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
கருத்துகள்