டில்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவித்தார்
தில்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ 2 லட்சமும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
“தில்லியில் ஏற்பட்ட சோகமான தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்று பிரதமர் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi,” என்று பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
கருத்துகள்