நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயாதேவி ஆலயத்திற்குப் பிரதமர் பயணம் செய்தார்
லும்பினிக்குத் தமது ஒரு நாள் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2022, மே16 அன்றுநேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயாதேவி ஆலயத்திற்குப் பயணம் செய்தார்.
பிரதமருடன் நேபாள பிரதமர் மேன்மைதங்கிய ஷேர் பகதூர் தூபாவும் அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபாவும் சென்றிருந்தனர்.
கோவில் வளாகத்தின் உட்பகுதியில் உள்ள குறியீட்டுக் கல்லுக்கு இந்தத் தலைவர்கள்
மரியாதை செலுத்தினர். இது பகவான் புத்தரின் மிகச்சரியான பிறப்பிடம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாகும். புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜையில் அவர்கள் பங்கேற்றனர்.
ஆலயத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அசோகர் ஸ்தூபி அருகே இரு பிரதமர்களும் விளக்குகள் ஏற்றிவைத்தனர். இந்தத் தூண் கி.மு. 249-ல் அசோக சக்கரவர்த்தியால் நிறுவப்பட்டது. பகவான் புத்தரின் பிறப்பிடம் என்பதற்கான முதல் கல்வெட்டு ஆதாரமாக லும்பினியில் இது உள்ளது. இதன்பிறகு புத்தகயாவில் இருந்து கொண்டுவரப்பட்டு 2014-ல் லும்பினிக்குப் பிரதமர் மோடியால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட
போதி மரக்கன்றுக்கு இரு பிரதமர்களும் நீர் வார்த்தனர். ஆலயத்தின் வருகையாளர் பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர்.புத்தபூர்ணிமா அன்று பகவான் புத்தரின் கோட்பாடுகளை பிரதமர் நினைவுகூர்கிறார்
புத்தபூர்ணிமாவை முன்னிட்டு பகவான் புத்தரின் கோட்பாடுகளை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவற்றை நிறைவேற்றும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“புத்தபூர்ணிமா அன்று பகவான் புத்தரின் கோட்பாடுகளை நாம் நினைவுகூர்வதுடன், அவற்றை நிறைவேற்றும் நமது உறுதித் தன்மையையும் வலியுறுத்துகிறோம். பகவான் புத்தரின் சிந்தனைகள் நமது பூமியை மேலும் அமைதியானதாகவும், இணக்கமானதாகவும், நிலையானதாகவும் மாற்றக்கூடும்.”
கருத்துகள்