கற்பித்தலை மேம்படுத்தும் சூழலை உருவாக்க மாளவியா இயக்கத்தை செயல்படுத்துமாறு மத்திய அமைச்சர் வேண்டுகோள்
நாடு தழுவிய கற்பித்தலை மேம்படுத்தும் சூழலை உருவாக்க மாளவியா இயக்கத்தை செயல்படுத்துமாறு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
நாடு தழுவிய கற்பித்தலை மேம்படுத்தும் சூழலை உருவாக்க மாளவியா இயக்கத்தை செயல்படுத்துமாறு திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து இன்று ஆய்வு நடத்திய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
21ஆம் நூற்றாண்டில் இந்தியா சந்திக்கும் சவால்களை சமாளிப்பதற்கான ஆசிரியர் தகுதித் திறனை மேம்படுத்தும் பலபரிமாண அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஆசிரியர் கல்வி குறித்த தேசிய கல்விக் கொள்கை அம்சம் பற்றி குறிப்பிட்ட அவர், இந்திய விழுமியங்கள், மொழிகள், அறிவு பாரம்பரியங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் இந்த அணுகுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்துகள்