வீர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
வீர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“பாரதத் தாயின் கடின உழைப்பாளி திருமகனான வீர் சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று அன்னாருக்கு மரியாதைகலந்த அஞ்சலிகள்".எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பங்குகொண்ட ஒரு குறிப்பிடத்தகுந்தவர் என்று கூறப்படுகிறது. இவரை இவருடைய பற்றாளர்கள் அதிகமாக வடக்கத்தேய இந்து கொள்கையாளர்கள் "வீர் சாவர்க்கர்" என்றழைக்கின்றனர் இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று இருந்தாலும் 12 ஆண்டுகளின் பின் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
வினாயக்கு தாமோதர் சாவர்க்கர் இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ பாரத சங்கத்தையும், இலண்டனில் சுதந்திர இந்திய சங்கத்தையும், இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார். இந்து மகாசபையை உருவாக்கினார்
கருத்துகள்