இலஞ்சம் வாங்கிய மின் வாரியத்தின் பொறியாளருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் வேணுகோபால் தெருவைச் சேர்ந்தவர் அரிதாஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு மும்முனை இணைப்புக் கோரி அது கணினி பதிவில்லாத காலம் என்பதால் அதே பகுதியிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, மின்வாரிய இளநிலைப் பொறியாளர் மணி ரூ.1000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அரிதாஸ் இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் கொடுத்தார்.
அதன்படி கடந்த 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் அரிதாஸிடம் பெற்ற பணத்தில் பினாப்தலின் இரசாயனம் தடவி அரசு தரப்பில் சாட்சியுடன் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினார். மறைந்திருந்தனர். அப்போது மணியை இலஞ்சமாகப் பெற்ற பணம் உள்ள கையுடன் மடக்கிப் பிடித்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேலரசு குற்றவாளியின் குற்றம் நிரூபணமானதால் மணிக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக அமுதா ஆஜராகி வாதாடினார்.
கருத்துகள்