கோ.க.மணியை கீழிறக்கி டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்ட பா ம க சிறப்பு பொதுக் குழுக் கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்று வருவதில் அதன் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான தீர்மானத்தில் கூறப்படுவதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி, கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.இந்திய வரலாற்றில் இளம் வயதில் மத்திய கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர்,
உலகத்தின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை இந்தியாவில் செயல்படுத்தியவர், உயிர் காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்தவர், புகையிலை ஒழிப்பு மற்றும் போலியோ நோய் ஒழிப்புக்காக 4 சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றவர், மிகவும் இளைய வயதில் உலக சுகாதார அவையை தலைமையேற்று நடத்தியவர், 50 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஐந்தாண்டுகளில் செய்தவர் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், மருத்துவத் துறையின் நடமாடும் என்சைக்ளோபீடியா என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியால் பாராட்டப்பட்டவர், ஐ.நா. தலைமை செயலாளராக இருந்த பான்-கி-மூன் மரபுவரிசையை (Protocol) மீறி, அலுவலகத்திற்கு தேடி வந்து பாராட்டிய பெருமைக்குரியவர், அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்திச் சென்ற ஜி.கே.மணி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசை ஒருமனதாக தேர்வு செய்கிறது" என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதன் படி புதிய தலைவரானார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவருக்கு காலம் சென்ற அண்ணன் நமது நலம் விரும்பி இராம.இராமநாதன் வார்த்தைகளை நினைவு கூர்ந்து பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சிறப்பான வாழ்த்துக்களை உரித்தாக்கும்
அதே வேளையில் ஆரம்ப காலத்தில் கோ.க.மணி பேராசிரியர் தீரன் போல் அல்லாமல் சுயநலமாக செயல்பட்டதே கட்சி வாக்கு வங்கி சரிவுக்கு காரணமாக அமைந்தது என்பதை மருத்துவர் அய்யாவிடம் நேரில் கூறியவர்களில் நமது இதழ் ஆசிரியரும் ஒருவர் என்பதால் , அக் கோரிக்கை தற்போது காலங்கடந்த நிலையில் நிறைவேறியுள்ளது. கோ.க.மணி ஆரம்ப காலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர் அவர் செயல்பாடு அவரோடு பழகிய நபர்கள் நன்கு அறிவர், அவரது வாக்கியப்படி கூறவேண்டுமானால் இது அவருக்கான பதவி இறக்கம் மட்டுமே மொத்தமாக கோ.க மணி பாமகவின் இனி செல்லாக்காசு என்பது அரசியல் அறிந்த அணைவராலும் அறியப்பட்டதே.
நான்கு நாட்களுக்கு முன்பு தான், 25 வருடம் கட்சி தலைவர் பதவியை நிறைவு செய்த ஜிகே மணிக்கு, வெள்ளி விழா நடத்தப்பட்டது. அன்புமணி தலைவராக தேர்ந்தடுக்கப்பட இருப்பதாலேயே, ஜிகே மணிக்கு விடை கொடுக்கும் வகையில், அந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது
கருத்துகள்