குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைவதால். 2 மாதங்களுக்கு பின்னர் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் பணிகள் துவங்கும்.
அதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து தேசிய அளவில் அரசியல் ரீதியாக விவாதம் துவங்கிய அறிகுறிகள் தென்படுகின்றன., அதற்கான தேர்வுப் பணிகள் தீவிரமனையும். நிலையில், குடியரசு தலைவர் வேட்பாளரைப் பொறுத்தவரை, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்ந்த நான்கு தலைவர்கள் பெயர் பேசப்படுகிறது. உத்திரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோராவர் இவர்கள் அல்லாத கடைசி நேரத்தில் ஒரு புதிய பெயரை அறிவிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அதிகம் வாய்ப்புகள் உண்டு. ஆனால் தெற்கில் உள்ள தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மாநில ஆளும் கட்சிகள் ஆதரவு வேண்டும் என்பதால் வெங்கையா நாயுடுவை களமிறங்க பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் நினைப்பதையடுத்தே வெங்கையா நாயுடு சமீபத்தில் தமிழகத்தின் முதல்வர் சந்தித்துப் பேசிய நிலையை அடுத்ததாக அமைச்சர் துரைமுருகனை சந்தித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக நான் நின்றால் ஆதரிக்கத் தயாரா என்று வெங்கையா நாயுடு சார்பில் முதல்வரிடம் கேட்கப்பட்டு இருக்கிறதாம். அது கட்சியின் சார்பில் எடுக்க வேண்டிய முடிவு. நான் வாக்கு கொடுக்க முடியாது என்றும் பாஜகவை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்க முன்வந்தால் அதன்படி நாங்கள் அனுப்பிய மசோதாக்கள் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும். அதை குடியரசுத் தலைவர் உடனே ஏற்க வேண்டும். இனி வரும் சட்டங்களுக்கும் இதே நிலையை பின்பற்ற வேண்டும். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது. இல்லையென்றால் ஆளுநர் ரவியை திரும்ப பெற்று வேறு ஆளுநரை நியமிக்க வேண்டும் .. அல்லது ஆளுநர் ரவி எங்களுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என திமுக தரப்பு கேட்டுள்ள தகவல். கிட்டத்தட்ட மாநிலத்தில் நல்ல முன்னெடுப்பு .
இதில் ஆளுனர் சம்பந்தப்பட்டு இருப்பதால்தான் அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. திமுக அரசு இயற்றிய மசோதாக்கள் என்னென்ன, அதை உடனே அனுமதிக்க முடியுமா என்று கேட்க அவருக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதையே காரணமாக வைத்து திமுக ஆதரவை குடியரசுத் தலைவர் தேர்தலில் பெறலாம் என்று பாஜக நினைக்கிறதாம். இதனால் மசோதாக்கள் ஒப்புதல் பெற்று அரசுடனான இனக்கம் வெளிப்படும் 540 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 334 உறுப்பினர்கள்.. 2017- ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் நிலையுடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மக்களவையில் பாரதிய ஜனதா .கட்சியின் பலம் அதிகரித்துள்ளது, 232 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நியமன உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாது.
மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே வாக்குகள் செலுத்த முடியும் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தையும் பார்க்க வேண்டும். 2017- ஆம் ஆண்டில் தற்போதய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான போது, இந்தியாவின்
70 சதவிகிதத்தை பா.ஜ.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியிலிருந்தன. அந்த பலம் இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ள நிலையில், அதில் தி.மு.க-வின் பங்கு முக்கியமானதாக இருக்கும் தற்போது 17 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்க, 6 மாநிலங்களைத் தவிர மற்றவை பெரிய மாநிலங்கள். தற்போது, யார் வேட்பாளர் என்பதுதான் பிரச்னை. ராம்நாத் கோவிந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்களா என்பதும். வெங்கையா நாயுடுவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல வேட்பாளராக நிறுத்த வாய்ப்பிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரிக்க வாய்ப்புகள் உண்டு. அவருக்கு, ஒடிஸாவில் நவீன் பட்நாயக் ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. தற்போதய குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எல்லா தரப்பினருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர். அரசியல் சாதுர்யம் அறிந்த வெங்கைய நாயுடுவை நிறுத்தினால், வெற்றிபெறுவது எளிதாக இருக்கும் என கட்சியும் நினைக்கலாம்.
இது ஒரு பக்கம் மற்றும் ஒரு சூழலில், பெரும் செல்வாக்குமிக்க ஒருவரை நிறுத்த வேண்டிய கட்டாயம் அந்த நிலையில் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. மராட்டிய மாநிலம் சார்ந்த தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்தினால் பலம் வாய்ந்த ஒரு வேட்பாளராக இருப்பார். சரத்பவார் நிச்சயமாக அவரை ஸ்டாலின் ஆதரிப்பார். எதிர்க்கட்சிகளில் சரத்பவாரைத் தவிர செல்வாக்குமிக்க வேட்பாளராக வேறு யாரும் இருப்பதாகத் நாம் அறியவில்லை. தற்போது சரத்பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அனைத்துக் கட்சிகளின் வேட்பாளராகக் கருத வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. மிக மூத்த தலைவராக சரத்பவார் இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் போது, வெற்றிபெறுவதற்கு தேவையான பலம் தங்களுக்கிருக்கும்” என்றும் ராவத் கருத்து. நாடாளுமன்ற மக்களவையில் 24 உறுப்பினர்களையும், மக்களவையில் 10 உறுப்பினர்களையும், தமிழகத்தில் 133 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தி.மு.க குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத்பவார் நிறுத்தப்பட்டால், அவரை தி.மு.க நிச்சயம் ஆதரிக்கும் என்ற நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச் சூழ்நிலையில் கலைஞர் சிலையை திறந்து வைக்கும் துணை குடியரசுத் தலைவர் வர உள்ள நிலையில் அரசியல் நடவடிக்கைகள் டெல்லி நிலையில் பரபரப்பு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.
கருத்துகள்