சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலதில் ஒட்டகத்தை வைத்து மணல் கொள்ளை. ஒட்டகத்தையும், பயன் படுத்தி மணல் அள்ளும் வண்டியையும் பறிமுதல் செய்த காவல்துறை.
சரவணன் மறவமஙலத்திலிருந்து அரேபியாவில் பணி புரிந்து திரும்பி. சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தவர் சில நாட்கள் மாட்டு வண்டியில் மணல் அள்ளியுள்ளார்.
மாடு பூட்டிய வண்டி மணல் பகுதியில் மாடு நடக்க முடியாமல் திணறியதையடுத்து சரவணன் இராஜஸ்தான் சென்று ஒட்டகத்தை வாங்கி வந்து மணல் வண்டியில் பயன் படுத்தி விரைவாக ஆற்று மணல் கடத்தல் செய்ய. இந்த ஒட்டகத்தை பயன்படுத்தி வண்டியில் டயர் மாட்டி தினசரி மணல் அள்ளிய நிலையில் அந்தப் பகுதியில் இரவு ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது ஒட்டகதின் மூலம் மணல் அள்ளுவது தெரியவரவே அவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரை ஒட்டகத்தை யார் பராமரிப்பது என்ற குழப்பம் காவல்துறையினர் மத்தியில் எழுந்ததனால், உரிமையாளர் சரவணனிடமே ஒட்டகத்தை பராமரிக்குமாறு அனுப்பியுள்ளனர். மணலை அள்ளுவதற்கு டிராக்டர், லாரி போன்றவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டகத்தை பயன்படுத்தியது மற்ற மாட்டு வண்டி மூலம் கடத்தும் நபர்கள் இடையே அப்பகுதியில் போட்டி இருந்த நிலையில் அது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்