திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் முத்து என்பவரின் 12 வயது மகன் மணிவேல் கம்பம் நகரில் ஒரு தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கிறான்.
கோடை விடுமுறை காரணமாக கோயமுத்தூர் துடியலூர் டி.வி.எஸ் நகர் பகுதியிலுள்ள தனது தாத்தா வீட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்றவன் .அங்குள்ள வீட்டின் மொட்டை மாடியில் பந்து விளையாடிய நிலையில் அப்போது பந்து மாடியிலிருந்து வீட்டின் அருகே உள்ள புதருக்குள் விழுந்துள்ளது. அதனை எடுக்க மணிவேல் சென்றபோது புதருக்குள் இருந்த கொ டிய விஷப்பாம்பு எதிர்பாராத விதமாக அவனது கையில் கடித்ததால் வலியில் துடித்த சிறுவனை உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆபத்தான கட்டத்தில் சிறுவன் அதிதீ வி ர அவசர சி கி ச் சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் .இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்