பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி செல்லாது.
மாணவர்கள் யாரும் தொலைதூரக் கல்வியில் சேர வேண்டாம் என யுஜிசி அறிக்கை. .பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது. குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படுமென பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், கருப்பூரில் 1997 ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கி. 2001 ஆம் ஆண்டு 96 பாடப் பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டமும் தொடங்கியது. தற்போது, 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக் கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ள நிலையில், பெரியார் பல் கலைக்கழகம் வெளி மாநிலங்களில் கூடுதலாக மையங்கள் தொடங்கியிருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, 2014-15 ஆம் கல்வியாண்டில் யுஜிசி மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்காத நிலையில் நடப்பாண்டு (2016-17) மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக தகவலறிந்த யுஜிசி, பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து செய்துள்ளதால், மாணவர்களைச் சேர்க்க வேண்டாமென கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கூறியதாவது: பிற மாநிலங்களில் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் திட்ட மையம் தொடங்கக் கூடாதென யுஜிசி கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியிருந்தது. தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பிற மாநிலங்களில் தொலைதூரக் கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் சேர்ப்பது நடைமுறையில் உள்ளது.
குறித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது ‘உள்ளது உள்ளபடியான’ முறையில் தொலைதூரக் கல்வி திட்டத்தை நடத்திக்கொள்ள உத்தரவு பெற்றுள்ளோம்.
இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து செய்துள்ளதாக யுஜிசி மீண்டும் அறிவித்துள்ளது. இதுவரை 21 ஆயிரம் மாணவர்களை சேர்த்துள்ளோம். இருப்பினும் கடந்த 3 நாட்களாக மாணவர் சேர்க்கை நிறுத்தியுள்ளோம்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடி, அதன் வழிகாட்டுதலின் படி, மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், தொலை தூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது.
எனக் அவர் கூறினார். அவர் பணி அப்படிக் கூறித் தான் ஆகவேண்டும் ஆனால் இதில் சாத்தியம் உண்டா படித்தால் அந்த பட்டம் செல்லுமா என்பதே தற்போது சேர்ந்த மாணவர்களிடம் உள்ள வினா?. விடை தேடி நிற்கிறது.!
கருத்துகள்