ஐந்து நிலக்கரிச் சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க நிலக்கரி அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை
ஐந்து நிலக்கரிச் சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க நிலக்கரி அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்திய நிலக்கரித்துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதேசமயம், சுற்றுச்சூழலை பாதுகாத்து, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், நிலையான வளர்ச்சிப் பாதையில் செல்லவும் திட்டமிட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக, இந்தியா நிலக்கரி கழகம், நிலக்கரி சுரங்க ஏரிகளை பாதுகாத்தல், ஈரமாகவுள்ள நிலங்களின் சுற்றுச்சூழல் தன்மையை பராமரித்தல், மேலும், நிலக்கரி சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை, மாநில அரசுகளின் உதவியுடன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ராம்சார் பட்டியலில், நிலக்கரி சுரங்க ஏரிகளை இணைப்பதற்கான தகுதி குறித்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராம்சார் பட்டியலில் சேர்ப்பதற்கான ஈரநிலங்கள் அடைய